பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய விலாசம் 327.

  • எந்த ஐயா? வாத்தியாருக்கா?’’

ஆமாம். அப்படியே கூட ஆயிரம் வாங்கி உன் கையில் கொடுத்தால், நீ எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து விடமாட்டாயா?”

  • நிச்சயமா, தம்பி. ‘’

ஆயிரம் ரூபாய் அப்போதே தன் கைக்கு வந்து விட்டது போலவும்; தன் மேற்பார்வையில் அரகுரே கிடுகிடுக்கும்படி இரண்டு கல்யாணங்களையும் நடத்தி வைப்பது போலவும் பக்கிரி மகிழ்ந்தான்.

குறுக்கே போன ஜட்கா ஒன்றை, ஹரி கைதட்டிக் கூப்பிட்டான். பக்கிரி, தன் கையிலிருந்த பையை அதில் வைத்தான். ஹரி ஏறி உட்கார்ந்ததும் கம்பியைப் போட்டுவிட்டு, என்ன செய்ய வேண்டும்?’ என்ற பாவனையில் உத்தரவுக்காகக் காத்திருந்தான்.

ஹரி, பக்கிரியின் சாப்பாட்டுச் செலவுக்கு ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தான். ராத்திரி என்னை ஸ்டேஷனில் சந்தி மாமா. உனக்கு ஏதாவது முடிவு சொல்லுகிறேன்’ என்று பக்கிரியை விடை கொடுத்து அனுப்பினான். பிறகு குதிரை வண்டி ஹரியின் உத்தரவுப்படி காந்தாமணியின் வீட்டை நோக்கி வேகமாக ஓடியது.

பக்கிரியோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த தனால், ஹரிக்கும் நன்றாகப் பசித்தது. சுவாமிமலையில் சாப்பிட்ட இட்டிலியும் காபியும், எப்போதோ ஜீரண மாகிவிட்டன. ஆனால், பக்கிரியுடன் ஹோட்டலுக்குள் நுழைய அவன் விரும்பவில்லை. நடுவழியில் வண்டியை நிறுத்தி, ஹோட்டலுக்குள் நுழையவும் அவன் விரும்ப வில்லை. ஏனெனில், ஹரியின் தலையைக் கண்டதுமே, முதலில், தட்டில் பலகாரத்தைக் கொண்டுவந்து வைத்துச்