பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 புல்லின் இதழ்கள்

கொடுக்க முடியாது. பணத்தை வீணாக்காமல் சிக்கன மாக இருங்கள். தங்கைகளின் கல்யாணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதற்கு நான் ஏதாவது ஒரு வழி செய்கிறேன்’ என்றான்.

அவன் வார்த்தையை ஊர்ஜிதம் செய்வதே போல் ஸ்டேஷன் மணி அடித்தது, பெருமூச்சும், சுடுநீரும் பெருக்கிக்கொண்டே, எஞ்சின், தண்டவாளத்தின்மேல் தவழ்ந்தது. பக்கிரி ஜன்னல் வழியாகப் பையைக் கொடுத்துவிட்டு விடைபெற்றுச் சென்றான்.

சுவாமிமலை வரை ஹரி, காந்தாமணி தியானத்தி லேயே இருந்தான். *

  • அன்று இரவு, அவள் மாடிக்கு வந்து என்னுடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தது அவள் தாய்க்குத் தெரிந்திருக்குமோ? அதனால், தாய்க்கும் மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, விபரீதமாகியிருக்குமோ? இல்லா விட்டால், திடீரென்று வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்றதோடல்லாமல், வீட்டையே விற்றுவிட்டு: தஞ்சாவூர் வாடையே வேண்டாம் என்று எண்ணு வானேன்? காந்தாமணியின் திருமணத்துக்கு இப்போது அப்படி என்ன அவசரம் வந்துவிட்டது? அவர்கள் குடும் பத்தில் ஒரு குழப்பம் ஏற்பட, நாம் காரணமாகி விட்டோமா? - இந்த வேதனை ஹரியின் மனத்தை மிகவும் வருத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘காந்தாமணியைப் போன்ற சிஷ்யையை, அல்லது ரசிகையை, இனி எப்போது பார்க்க்கப் போகிறோம்? இத்தனை அன்பும் ஆதரவும் காட்டியவர்களால், எப்படி ஒரேயடியாகக் கத்தரித்துக் கொண்டு செல்ல முடிந்தது? என்னால், இன்று ஒரு நாள் காந்தாமணியைப் பார்க்க இயலாமல் போனது தாங்க முடியாத தாபமாக இருக்கிறதே! -என்று எண்ணிய படியே ஊரை அடைந்தான்.