பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 புல்லின் இதழ்கள்

கிடைக்காமற் போனதோடு, அநியாயமாகச் சுசீலாவின் கையில் கிடைத்து விட்டதே என்று எண்ணி ஹரி வருந்தினான். அதில் காந்தாமணி என்ன எதியிருக் கிறாளோ? என் கடிதத்தைப் படிக்க அவன் துடித்தான்.

-அந்தக் கடித விஷயம், குருவுக்கும். அம்மாவுக்கும் தெரியுமோ? தெரிந்தால் அவர்கள் என்னைப்பற்றி எவ்வளவு தவறாக எண்ண இடமேற்படும்? காந்தா மணிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒப்புக்கொண்ட என்னுடைய நோக்கத்தை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்களா?

ஒரு வழியாகப் பொழுதும் விடிந்தது. லட்சுமி

யம்மாள், ஏதோ காரியமாகச் சுந்தரியைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.

அம்மா போன்தும், சுசீலா ஹரியிடம் மிகவும் கடுமையாகக் கோபித்துக் கொண்டாள். காந்தாமணியைக் கல்யாணராமனாக்கி, தஞ்சாவூரில் இத்தனை காலம் நாடகம் ஆடி வந்ததுடன், பொய் விலாசம் வேறு கொடுத்ததற்காகவும், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினாள்.

  • அப்பாவிடமும் அம்மாவிடமும் கடிதத்தைக்

காட்டவா?’ என்ற போது, 2துக்கம்isஅவள் நெஞ்சைப் பிளந்தது. -

ஹரிக்கு ஒன்றுமே புரியவில்லை.(இதிட்டி விட்டு, அவள் ஏன் அழவும் வேண்டும்?

ஏன் பேச மாட்டேன்’ என்கிறீர்கள்: சொல்லவா?” இன்னும் நீ அவர்களிடம் இதுபற்றிச் சொல்ல வில்லையா? ஹரிக்கு இதயத்தின் ஒரு மூலையில் உயிர் வளருவது போல் இருந்தது. சொல்லாவிட்டால், தயவு செய்து நீ அதை வெளியிட வேண்டாம். நான் என்