பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 புல்லின் இதழ்கள்

லட்சம் ரூபாய் வருவதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பதற்காகப் படியேறிப் போகக் கூடாது. சம்மதிப்பீர்களா?'’

ஹரியின் உடம்பெல்லாம் புல்லரித்தது. காந்தாமணி கேலி யாகச் சிரிப்பது போல் ஹரிக்குப் பிரமை தட்டியது.

முதலில் காந்தாமணியின் கடிதத்தை நீ என்னிடம் கொடு. பிறகு சம்மதத்தைப் பற்றிக் கேள்’’ என்றான் ஹரி.

  • கிழித்துப் போடப் போகிறேன். எதற்காக அந்தக் கடிதம்? வெட்கமாயில்லை? அவளைப் பார்க்க முடிய வில்லையே, எழுத்தையாவது பார்த்து ஆனந்தப்படலா மென்றா?”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ‘சுசீலா’ என்று அடித் தொண்டையில் அவன் கத்தினான். மான உணர்ச்சியால் அவன் உதடுகள் துடித்தன.

அவளைச் சொன்னால் உங்களுக்கு ஏன் இப்படிக் கோபம் வர வேண்டும்?’ ‘

‘நீ அவளைச் சொல்லவில்லை; என்னைச் சொல் கிறாய். என் ஒழுக்கத்தைக் குறை கூறுகிறாய். இன்னும் நான் இங்கிருந்தால், ஏதாவது பேசிக்கொண்டேயிருப்பாய். நான் ஒழிந்து போய் விடுகிறேன்’ என்று பதிலுக்குக் கூடக் காத்திராமல் ஹரி வெளியே சென்றுவிட்டான், அதைச் சற்றும் எதிர்பாராத சுசீலா அதிர்ந்து நின்றாள்.

காந்தாமணியின் கடிதத்தை வைத்துக் கொண்டு சுசீலா ஹரியை ஆட்டி வைத்ததையும், அவளுடைய அத்து மீறிய வார்த்தைகளைப் பொறுக்கமாட்டாமல் அவன் கோபித்துக்கொண்டு சென்றதையும் காயத்திரி கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அவனை எண்ணி அவள் மிகவும் வேதனைப்பட்டாள். சுசீலாவை இப்படியே