பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 புல்லின் இதழ்கள்

என் வாழ்க்கைக்குப் போட்டியாக மற்றவர்கள் ஏன் வர வேண்டும்? அதைச் சகித்துக்கொள்ள என்னால்

முடியாது.”

காயத்திரி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். உன் வாழ்க்கைக்குப் போட்டியா? எது உன் வாழ்க்கை? அதை முதலில் சொல்; பிறகு உனக்குப் போட்டியாக இருப்ப வர்களைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம்.’

சுசீலா விக்கித்துப் போனாள். காயத்திரியின் கேள்வி அவளுடைய மூளையைத் தாக்கியது. அவளுக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை.

- ஹரியைக் காணாமல் ஒரு நாள் இருக்க முடிவ தில்லை. வேறு ஒரு பெண் அவனை ஏறெடுத்துப் பார்ப் பதை மனம் அநுமதிப்பதில்லை. தஞ்சாவூரில் அவன் ஒரு வாரம் தங்கியவுடன், இந்த மனம் தவித்த தவிப்பையும் அநுபவித்த வேதனையையும் விவரிக்க வார்த்தைகளுக்கு வலிமை உண்டா? இந்தமிகச் சிறிய பிரிவையே தாங்க முடியாதபோது, நாளைக்கு வசந்தியோ, காந்தாமணியோ போட்டியிட்டுக்கொண்டு என் கையிலிருந்து ஹரியைத் தட்டிப் பறித்துக் கொண்டு போய்விட்டால்?

அதற்கு மேல் சுசீலாவினால் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை. ஹரி இல்லாத வாழ்க்கையே வெறும் குனியமாகத் தோன்றியது. அந்தச் சூனியத்தில் திக்குத் திசை தெரியாமல் தடுமாறிய அவளை, வலிய வந்து ஒரு கரம் அணைத்து. அந்தக் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட சுசீலா, அக்கா!’ என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

சுசீலாவின் அழுகையும்கண்ணிருமே அவளுடைய தோல் வியையும், உள்ளக் கிடக்கையையும் வெளிப்படுத்தின. ஆனால், இது காயத்திரிக்கு என்றோ தெரிந்த பழைய விஷயம். எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படையாக