பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயம் வெளுத்தது 341

எல்லோர் கண்ணிலும் படும்படியாக ஹரியை சுசீலா வெறுத்து வந்தாளோ அவ்வளவுக்கு அவ்வளவு யாருக்கும் தெரியாமல் ஹரியைச் சுசீலா நேசித்தே வந்திருக் கிறாள். ஆனால், சுசீலாவுக்கே அது புரிய இத்தனை நாள் ஆனது தான் விந்தை!

-ஹரிக்கு வேறு போக்கிடம் ஏது? அவன் என்னை விட்டு எங்கே போய்விட முடியும்?’ என்ற எண்ணத்தை உடைத்து, ஹரி நீ விலைக்கு வாங்கிவிட்ட பொருளல்ல. மணமாகிறவரை, வசந்தி என்ன, காந்தாமணி என்ன, இன்னும் எத்தனை பெண்கள் வேண்டுமானாலும் அவனிடம் நேசம் பாராட்டலாம். அவனும் தனக்கு விருப்பமானவளை மணந்துகொண்டு சென்றுவிட முடியும். அவனுக்காக நீ என்ன செய்தாய்? நேசம் காட்டினயா, பாசம் பாராட்டினாயர்? அவன் யாரோ, நீ யாரோ?” என்ற உணர்வு தூண்டப்பட்டவுடன்தான் சுசீலாவின் காதல் விழித்துக் கொண்டது.

ஆனால், இந்த விழிப்பு ஏற்பட்டவுடன் அவள் உள்ளம் குமுறியது. ‘ஹரி எனக்குக் கிடைக்கமாட்டானோ?’ என்ற ஏக்கம் பிறந்தது. எல்லை மீறிய அந்த ஏக்கத்துடன், அவள் காயத்திரியின் முகத்தையே பார்த்துக் கொண் டிருந்தாள்.

ஹரியை மணந்துகொள்ள எல்லா விதத்திலும் வசந்தியே பொருத்தமானவள் என்று அப்பாவும் அம்மாவும் ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றனர். சுந்தரியும், தன் மகளுக்கு, இந்தப் பெரிய வித்துவானை முடித்துவிட எண்ணியிருக்கிறாள். இந்த நிலையில் அவர்கள் மத்தியில் நான் போய் என்ன சொல்ல முடியும்? அப்பாவைப் பொறுத்த வரை மிகவும் முற்போக்காக நடந்து கொள்ளக் கூடியவர் என்றாலும், அம்மா சம்மதிப் பாளா? ஹரி கிடைக்காவிட்டாலும், விறகுக்கட்டையால் முதுகில் பத்து அடி நிச்சயம் கிடைக்கும். ஆகவே, இந்த