பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 புல்லின் இதழ்கள்

கிறாள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஆயினும் இறுதியில் முடிவு என்று வரும்போது, ஹரியின் விருப்பத் துக்கு விரோதமாக யாரும் - அப்பா கூட குறுக்கே நிற்க மாட்டார். ஆகவே அவன் மனத்தைக் கவர்ந்து உன் ளிைடம் திருப்பிக்கொள்ள வேண்டியது உன்பொறுப்பு. அதில் வெற்றி கிட்டுவது உன் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.

ஆனால் இறுதியாக உன்னை ஒன்று கேட்கிறேன்; நன்றாக யோசனை செய்து பதில் கூறினால் போதும். ஹரியை நீ மனப்பூர்வமாகக் காதலிக்கிறாயா?”

ஆமாம். -யோசிப்பதற்கே இதில் ஒன்றுமில்லை என்பதே போல் பளிச்சென்று பதில் கூறினாள் சுசீலா.

பின்னால் எத்தனை சங்கடங்களும், எதிர்ப்புகளும் வந்தாலும்-ஏன், நாளைக்குச் சுந்தரி சித்தியின் எதிரி லும் நீ இதைத் தயங்காமல் சொல்லுவாய் அல்லவா?’’

நிச்சயமாகச் சொல்லுவேன். சித்தி என்ன? குறுக் கிட்டால், வசந்தியிடமே என் காதலுக்காகப் போராடத் துணிந்துவிட்டேன். ஹரி இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. சண்டை போட்டுக் கொண்டாவது நான் ஹரியோடுதான் வாழ்வேனே அன்றி; என்னால் ஹரியைப் பிரிந்திருக்கவே முடியாது. இதை நான் இப்போதே அப்பா விடம் வேண்டுமானாலும் சொல்லிவிடுகிறேன்’ என்று எழுந்தாள். உடனே காயத்திரி அவளுடைய கையைப் பிடித்திழுத்து அருகில் உட்கார்த்திக் கொண்டாள்.

இந்த அவசரந்தான் கூடாது என்கிறேன். நினைத் ததை யெல்லாம் வாரிக் கொட்டுவதற்கு, மனம் என்பது குப்பைக் கூடையல்ல. அது வைரப் பேழை. அதில் மிக உயர்ந்த பொருளை வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றாள் காயத்திரி.