பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கனவல்லவே!

வானத்துச் சந்திரன் வெடித்து அமுதமாய்ப் பொழியும் சுகத்தைப் பற்றி ஹரிக்குத் தெரியாது. ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள், பாரிஜாத மலர்களாக மாறித் தலையில் பொல பொலவென்று கொட்டினால் ஏற்படுகிற இன்ப உணர்ச்சியை அவன் நுகர்ந்தவனல்ல. ஆனால் எல்லா வற்றுக்கும் மேலானதொரு இன்பத்தில் அவன் மூழ்கிப் போனான்.

சுசீலா அவனைக் காதலிக்கிறாளாம்! ஆம்! இதயக் கதவுகளைத் திறந்து அதில் அத்தனை காலம் பூட்டி வைத் திருந்த எண்ணங்களை வாசி இறைத்து விட்டாள் சுசீலா!

வாழ்க்கையிலேயே அது ஒரு புனிதமான நாள். புது: நிகழ்ச்சி. அந்த அநுபவம் அவனுக்குப் புதிது. எதையும் அவனால் நம்ப முடியவில்லை: நம்பாமலும் இருக்க முடிய வில்லை.

விழித்துக் கொண்டே துரங்குகிறோமா அல்லது துரங்கிக் கொண்டே விழித்திருக்கிறோமா என்று அவன் எண்ணிப் பார்த்தான். காதால் கேட்ட வார்த்தைகள் எல்லாம், சுலோவின் வாயால் கேட்ட வார்த்தைகள் தாமா என்பதை அவனுடைய செவிகளே ஏற்க மறுத்தன.

கண்ணால் காணும் பொழுதெல்லாம் விரோதியைப் போல் விரட்டிக் கொண்டே இருந்தவளின் உள்ளத்தில் இப்படி ஒர் எண்ணமா? இதைப் பகுத்தறிவு ஏற்குமா? ஹரி யோசித்தான்.