பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவல்லவே! 3 47

- நல்ல பாம்பின் விஷந்தான் நாகரத்தினமாக உருப் பெறுகிறதாமே! அதைப் போல் ஒருவேளை, இதுவும் அப்படி உருவான காதலோ? யார் கண்டார்கள் இந்தப் பெண்களின் மனத்தை? ஆழம் காண முடியாத கடலைப் போன்றது அவர்களது உள்ளம் என்கிறார்கள். ஆழம் காண முடியாத கடலின் அடிவாரத்தில்தானே நல் முத்துக்களும், பவழங்களும் புதைந்து கிடக்கின்றன?

“ஆனால், மூழ்குகிறவனுக்குத்தானே முத்துக்கள் கிடைக்கும் என்பார்கள்! கரையில் நிற்பவன் தலையில் முத்துமாரி பொழிந்தால்?-ஹரி வாய்விட்டே கேட்டு விட்டான்.

ஒரு வேளை இதுவும் கடலின் கோபமோ?

சுசீலாவின் உள்ளம் இப்படிப் பாகாய் உருக, தான் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தி விட்டதாக ஹரிக்கு நினைவில்லை. மந்திரவாதிக் கதைகளில் வருகிற மாதிரி, சுலோவின் இந்தத் திடீர் மாறுதலுக்குக் காரணம் என்ன வாக இருக்க முடியும்? ஒரு வேளை காந்தாமணியின் கடிதமாக இருக்குமோ? அதில் அப்படி அவள் என்னதான் எழுதியிருக்க முடியும்? என்று யோசித்து யோசித்து மூளையைக் குழப்பிக் கொண்டானே தவிர, விடை என்னவோ அவனுடைய யோசனைக்கு அப்பாற்பட்ட தாகவே இருந்தது. ஆனால் கடிதத்தைச் சுசீலாவிடம் கேட்க அவனுக்குத் துணிவில்லை. காயத்திரியிடம் கூறினான். அது யாரிடம் இருந்தால் என்ன? சமயம் வரும்போது வாங்கித் தருகிறேன்’ என்று கூறிவிட்டாள்.

சுசீலாவை நம்பி எதிலும் இறங்க அவனுக்குப் பயமாகவே இருந்தது. இத்தனை நாளாக அதட்டிக் கொண்டிருந்தவள் இப்பொழுது குழைந்து குழைந்து வந்து அன்பு காட்டிச் சிரித்துப் பேச முன் வந்தாலும், அவன் முன் போலவே, அவளிடம் ஒதுங்கியே பழகினான். பூனை