பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 புல்லின் இதழ்கள்

சாதுவாக மாறி விட்டாலும் பிறாண்டுகிற அதன் சுபாவம் மறைந்துவிடுமோ?

சுசீலாவின் இந்த விசித்திரக் காதலைப் பற்றிக் காயத் திரியிடம் ஹரி கூறினான்.

  • நீயும் துணிந்து அதையே திருப்பிச் செய்து விடு’ என்று ஹரிக்கு உற்சாகமூட்டினாள் காயத்திரி. ஹரி மெல்லச் சிரித்தபடிக் கூறினான்:
  • சுசீலாவுக்கு வாழ்க்கையே ஒரு விளையாட்டு. அவள் எது வேண்டுமானாலும் பேசலாம்; எப்படி வேண்டுமா னாலும் நடந்துகொள்வாள். இன்று காதலிக்கிறேன் என்பாள். நாளை உன்னை நான் பார்த்ததே இல்லை என்பாள். அது போகட்டும்; அவளைத் திருத்த நான் யார்? ஆனால் புலி பாயத்தான் வேண்டும்; பாம்பு இறத்தான் வேண்டும். இவற்றின் குணம் மாறினாலும் மனிதனுக்கு நம்பிக்கை ஏற்படாது. ஆகவே சுசீலாவை நான் பழைய சுசீலாவாகவே காண விரும்புகிறேன். உண்மையான சுபாவப்படி வாழ்வதுதான் இருவருக்கும் நல்லது. என் உள்ளத்தைப் பொறுந்தவரை, காதலுக்கோ, கல்யாணத்துக்கோ நான் இதுவரை இடம் கொடுக்க வில்லை. ஆயுள் முழுவதும் இசைக் கலைக்கே தொண்டு செய்து காலத்தை ஒட்டிவிட வேண்டும் என்பது என் விருப்பம், அந்த விருப்பம் ஈடேறாவிட்டாலும், சுசீலா போன்ற பெண்ணை நான் எண்ணிப் பார்க்கக்கூடாது. அது, ஐயாவுக்கும், அம்மாவுக்குமே என்மீது உள்ள நல்ல எண்ணத்துக்கு மாசு ஏற்படுத்திவிடும். நான் யார் என்று ஒருபோதும் மறந்ததில்லை. சுசீலாவுக்கும் மற்றவர்களுக் கும் வேண்டுமானால் என்னைப்பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் என் வாழ்க்கையைத் தெரிந்து வைத்துள்ள நீங்கள் இப்படிச் சுசீலாவை ஆதரிக்கலாமா?’’ என்று கேட்டான்.