பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா வல்லவே! - 355

இதை அறிந்தவுடன் எப்படித் துடிப்பாள்?’ என்பதையும் காயத்திரியினால் எண்ணிப் பார்க்க முடிந்தது. ஆயினும் ாணப் போரில் குதித்தவன், அஞ்சாமல் தன் கடமையைச் செய்துவிட வேண்டியதுதானே நியாயம் என்று நீர்மானித்துக் கொண்ட அவள், சரியான சந்தர்ப்பத்தில் தன் தகப்பனாரிடம் கூறிவிட்டாள்.

இந்தச் செய்தியைக் கேட்ட பாகவதர் அப்படியே அதிர்ந்து போய்விட்டார்.

வசந்தியைத் தனக்குப் பிடிக்கவில்லை என்பதையோ, அல்லது சுசீலாவைத் தனக்குப் பிடிக்கிறது என்பதையோ, ஏன் இந்த ஹரி என்னிடம் இதுவரை சொல்லாமலே இருந்துவிட்டான்? இதற்குக் காரணம் என்னிடம் அவனுக்கு உள்ள பயமா, அல்லது மரியாதையா?” என்பதை அவரால் ஆராய முடியவில்லை.

சுசீலாவும், வசந்தியும், இரண்டு கண்களே என்றாலும், இதில் எதைக் குருடாக்கிக் கொள்ள அவர் மனம் ஒப்பும்? இந்தச் செய்தியைக் கேட்டால் சுந்தரியின் மனம் என்ன பாடுபடும்? இதை அவரால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. காயத்திரி இந்தச் செய்தியைக் கூறியவுடன், முதல் நாள் அவளிடம் அவரால் எதுவுமே பேச முடிய வில்லை.

மனத்தில் தெம்பை ஏற்றிக் கொண்டு மறுநாள் தான் பாகவதர் காயத்திரியிடம் எல்லாவற்றையும் விவர மாகக் கேட்டார். அதன் பிறகுதான் அவருக்கு ஒரு உண்மை புலனாயிற்று.

-ஹரியைப் பொறுத்தவரை, அவனுக்கு வசந்தியோ சுசீலாவோ அல்லது வேறு எந்தப் பெண்ணுமே வேண்டாம். ஏனெனில், அவன் திருமணமே செய்து கொள்ளப் போவ தில்லை என்கிற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால்,