பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 புல்லின் இதழ்கள்

சுசீலாவுக்காகத்தான் இந்தத் திருமணப் பேச்சே இப்போது திசை மாறியிருக்கிறது. அவனை மணந்து கொள்ள வேண்டுமென்று சுசீலா ஒரே துடியாக இருக்கிறாள். ‘ஹரி மறுத்துவிட்டாலும், வசந்தியால் அந்த அதிர்ச்சி யைத் தாங்கிக்கொள்ள முடியும்; ஆனால் சுசீலாவோ உயிரையே விட்டுவிடுவாள்’ என்று கூறிய காயத்திரியின் வார்த்தைகள் அவர் நெஞ்சில் எதிரொலித்தன. சுசீலாவின் குணத்துக்கும் முரட்டுச் சுபாவத்துக்கும் அநுசரித்துப் போக, ஹரியைத் தவிர எந்தப் புருஷனும் கிடைக்க மாட்டான் என்பதுதான் எவ்வளவு உண்மை?

சுசீலாவைப் பற்றிக் காயத்திரி கூறிய கருத்துக்கனை ஒப்பிட்டுப் பார்த்தபோது; அவளுக்குச் சகல விதத்திலும் ஹரியே ஏற்றவன் என்பதை அவர் மனம் ஆமோதித்தது. ஆனால், இத்தனை பெரிய விஷயத்தை எப்படி ஆரம்பிப் பது ஆரம்பித்தபின் அது எப்படி முடியும் என்னும் கவலையிலேயே பாகவதர் மனம் உழன்று கொண்டிருந்தது.

‘இந்த விஷயத்தைப்பற்றி இப்போது பேச வேண் -ாம். சமயம் பார்த்து நானே சுந்தரியிடம் பக்குவமாகப் பேசி விளக்கிவிடுகிறேன்’ என்று கூறி விட்டார். காயத்திரி தன் தலையில் இருந்த மிகப் பெரிய பாரம் ஒன்று இறக்கப்பட்டது போல் உணர்ந்தாள்.

இந்த விஷயத்துக்குப் பிறகு சுந்தரியைப் பார்க்கும் போதெல்லாம் பாகவதருக்குத் துக்கம் நெஞ்சை அடைக் கும். தன்னையே நம்பிச் சகலத்தையும் துறந்து நிற்கும் கள்ளங்கபடு அறியாத ஒரு பெண்ணை ஏமாற்றி வருவ தாக அவர் நெஞ்சம் உறுத்தும். ஆயினும் வேறு வழி யின்றி அந்த உறுத்தலை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

பாகவதர் படுக்கையில் விழுந்ததிலிருந்து, சுந்தரியும் சுவாமிமலைக் குடும்பச் செலவைப் பகிர்ந்துகொண்டு