பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 புல்லின் இதழ்கள்

சமாதானம் சொல்ல வந்த காயத்திரியை, லட்சுமி யம்மாளுக்குக் கன்னத்தில் அறைந்து அனுப்ப வேண்டும் போலிருந்தது: தன் கணவரிடம் ஒர் ஆவர்த்தனம் அழுது தீர்த்தாள்.

  • இது அடுக்குமா? கூப்பிட்டுக் கண்டிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே! சுந்தரிக்குத் தெரிந்தால் பிரானனையே விட்டு விடுவாளே!’ என்று துடித்தாள்.

நான் என்ன செய்ய லட்சுமி? கால் ஒடிந்து படுக் கையில் கிடக்கிறேன். கடையாணி இல்லாத வண்டி போல் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இந்த குடும்ப வண்டி ஒடிக் கொண்டிருக்கிறது. என்றைக்கு இடையில் குடை சாய்ந்து எல்லாருமாக விழப்போகிறோமோ, அதுவரை சவாரி நிற்கப் போவதில்லை. உனக்காக வேண்டுமானால் ஹரியையும் கூப்பிட்டு விசாரிக்கிறேன். உன் பெண்ணைக் கூப்பிட்டுக் கண்டிக்கிறேன். ஆனால், திருத்துவதற்கு நீயோ நானோ யார்?’

ஹரியைக் கூப்பிட்டு விசாரித்தார். அவன் அந்த ஒரே பதிலைத்தான் குருவினிடமும் கூறினான்.

“என்னைப் பொறுத்த வரையில் திருமணம் என்பது நான் விரும்பாத ஒன்று. ஆனால் எப்போதும் எல்லா விஷயத்தையும் போலவே நான் என்னுடைய இந்தத் திருமண விஷயத்திலும்; தங்கள் உத்தரவுப் படியே நடக் கச் சித்தமாக இருக்கிறேன்.’

‘அப்படி நீ என் சொற்படியே, உன் திருமண விஷயத்திலும் மனப்பூர்வமாக நடக்கச் சித்தமாக இருந் தால், உன் விசுவாசத்தைப் பாராட்டுகிறேன். நான் இது வரை உன்னைக் கூப்பிட்டு இது விஷயமாகப் பேச முடிய வில்லையே தவிர: வசந்திக்கே நீ என்பது நாங்கள் என்றோ முடிவு செய்த விஷயம். வசந்தியை மணந்து