பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

O புல்லின் இதழ்கள்

வந்ததிலிருந்து - எட்டு வயதில் பாவாடை கட்டிக் கொண்டு ஆரம்பித்த சண்டை; இன்று பத்து வருஷம் ஆகியும் ஒயவில்லை. இனி மேலும் வசந்தியைக் கட்டிக் கொண்டு எங்கே ஹரி சுகப்பட்டு விடப்போகிறானோ என்றுதான் நீ இப்போது இப்படி ஆரம்பித்திருக்கிறாய். உன் கெட்ட எண்ணம் யாருக்குத் தெரியாது?’’

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள் |ளுங்கள். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் கவலையில்லை.’

‘உனக்கு எதைப் பற்றித்தான் கவலை? எதைப் பற்றியாவது கவலைப்படுகிறவளாக இருந்தால் உன்னால் இப்படித் திட்டம் போட்டுக் கொண்டு பேச வருமா? பாவி! நான் இனி எந்த முகத்தோடு சுந்தரியைப் பார்ப்பேன்?’ என்று அழுது கொண்டே லட்சுமியம்மாள்

உள்ளே சென்று விட்டாள்.

  • அம்மா!’ என்று அரற்றிக் கொண்டே நின்ற சுசீலாவின் முதுகைத் தட்டி, “கவலைப்படாதே’ என்று தேற்றினாள் காயத்திரி.

இதையெல்லாம் பார்த்த பாகவதர் முடிவுக்கு வந்து விட்டார். உள்ளே சென்ற லட்சுமியை அழைத்தார்.

- சுந்தரியையும், வசந்தியையும் நான் சமாதானம் செய்து கொள்கிறேன். சுசீலாவின் திருமணம் நடக் கட்டும்’ என்று கூறிவிட்டு ஹரியின் பக்கம் திரும்பினார். ஹரி, உனக்குச் சுசீலாவை மணந்து கொள்ளச் சம்மத மா?’ என்றார்.

உங்கள் விருப்பம்’ என்றான் ஹரி.