பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டபச் சாதகன் 31

கண்டதும் முனியம்மாளுக்குப் பின்னும் கோபம் அதிக மாயிற்றே தவிரக் குறையவில்லை. அவனை ஒழித்துக்கட்ட அதுவே சரியானக் கட்டம் என்று எண்ணி வாய்க்கு வந்தபடி திட்டினாள்.

‘ஒண்ணு, இந்த வீட்டிலே இனிமே நீ இருக்கணும், இல்லாட்டி நான் இருக்கணும், நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்க முடியாது’ என்று தீர்மானமாகக் கூறினாள். அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாத பெரியசாமி, மனைவியோடு சேர்ந்து மகனைக் கண்டபடி திட்டி, அவளுடைய திருப்திக்காகவே கை வலிக்கும்வரை அடித்தான். உடனே முனியம்மாள், போ, எங்கேயாவது ஒழிஞ்சு போ! உருப்படாத உன்னை வச்சுக்கிட்டுத் தண்டச் சோறு போட என்னாலே ஆவாது; ஒடு!” என்று கடிந்து விரட்டினாள். பெரியசாமி வாய் திறக்கவில்லை.

கண்ணப்பனுக்கு இனிமேல் அந்த வீட்டில் இருக்க முடி யாது. இருக்கக்கூடாது என்பது புரிந்தது. தன்னை விடத் தந்தைக்குச் சிற்றன்னைதான் முக்கியம். அவள் உதவி, அவள் அன்பு தான் அவருக்குப் பெரிது; அதுதான் உண்மை யுங்கூட: இனிமேல் நாம் ஒடிவிட வேண்டியதுதான் என்ற நிச்சயமான முடிவுக்கு வந்துவிட்டான்.

அன்றுமுதல் கண்ணப்பன் பொதுவுடைமை ஆகி விட்டான். இந்தப் பரந்த பூமியெல்லாம் தனக்குச் சொந்த மாகவும், அதில் வாழும் அத்தனை மக்களுமே தன் உறவினர்களாகவும் நண்பர்களாகவும் அவன் கருதினான். தன் சாண் வயிற்றுச் சோற்றைப் பற்றி அவன் கவலை கொள்ளவில்லை. எப்படியோ வேளைக்கு வேளை, இடத் துக்கு இடம் அலைந்து, காலமும் நேரமும் தப்பினாலும், உணவு தப்பாமல் கிடைத்தது. ஏதோ வேலை செய்தான். அந்த நேரம் போகக் கச்சேரி எங்காவது இருந்தால் அதைக் கேட்பான். ஒய்வில் பாடுவான். இப்படியே ஊரூராகச் சுற்றிச் சுவாமி மலைக்கு வந்து சேர்ந்தான். அந்த ஊரும்,