பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 புல்லின் இதழ்கள்

பற்றியே மற்றவர்கள் ஏன் பேசிக் கொண்டு இருக்க வேண்டும்? எனக்குச் சுசீலா என்ன உயர்வு; வசந்தி என்ன தாழ்வு? காந்தாமணி கையில் வந்து விழுந்தவுடன் உதறவில்லையா? வாயைத் திறந்து பாடத் தொடங்கி னால், குயில்கள் கூட்டத்துடன் தேடி வந்து தன் இனம் என்று அவளைச் சூழ்ந்து கொள்ளுமே! அப்படிப்பட்ட காந்தாமணியே என்னை விட்டுப்போய்விட்டாள். ஆனால், போனவள் உயிரோடு இருந்தால், இந்த உலகத்தின் எந்த மூலையிலும் என்னை நினைத்துக்கொண்டேதான் இருப் பாளே அன்றி, என்னை மறந்துவிட அவளால் முடியாதுஎன்று ஹரி தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டான்.

திருவிடைமருதூரிலிருந்து புறப்பட்ட ஹரி, நேராகச் சுவாமிமலைக்குப் போய்விடவில்லை. கும்பகோணத்துக்குத் தான் டிக்கெட் வாங்கியிருந்தான். கும்பேசுவரரையும் ‘மங்களாம்பிகையையும் தரிசனம் செய்து வரலாம் என்று எண்ணினான். அத்துடன் அவனுக்கு நகரிலும் முக்கிய வேலை இருந்தது.

ஸ்டேஷனை விட்டு வரும் வழியில் குருநாதருக்கு வேண்டிய மருந்துகளை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டான். டயமண்ட் சினிமா வழியாகக் காந்தி பார்க்குக்குவந்து, கணபதி அண்ட கோ கடையில் குருநாதருக்கு வறுத்த வாசனைச் சீவலும்; ஒரு டப்பா பட்டனம் பொடியும் வாங்கிக் கொண்டான். அம்மாவுக் தாக எட்டனாவுக்கு நல்ல வாசனை விடயங்களை வாங்கி நலுங்காமல் பையில் வைத்துக் கொண்டான். அதில் இரண்டை மட்டும் எடுத்துத் தனியாகத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். யாருக்கும் தெரியாமல் சுசீலாவுக்குத் தான் வாங்கிக் கொடுக்கப் போகிற வைர மோதிரத்தை அந்த விடத்தினுள் வைத்து அவள் கையில் கொடுத்து; அதை அவள் ஆசையோடு வாயில் போட்டுக் கொள்ளப் போகும்போது, சட்டென்று அவள் கையிலிருந்து தட்டிப் பறிக்க வேண்டும். விடயத்தைப் பிரித்துப்