பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணையாழி 365

பார்க்கச் செய்து, *வைரம் கொடுத்து உன்னைக் கொல்லச் சதி செய்த இந்தக் குற்றவாளிக்கு என்ன - தண்டனை அளிக்கப்போகிறாய் சுசீலா?’ என்று கேட்க வேண்டும். அவள் இதோ இருங்கள்’ என்று மோதி ரத்தை எடுத்து தன் விரலில் அணிந்து கொண்டு விட யத்தை மடித்து என் வாயில் போட வரும்போது, அதைப் பிடுங்கி அவள் வாயில் போட்டு, ரத்தச் சிவப்பேறிய உதடுகளில் ஒளிரும் புன்னகையைக் கண்டு மகிழவேண்டும்’ என்றெல்லாம் கற்பனை பண்ணிக்கொண்டே, பெரிய தெரு வில் பிரபல வைர வியாபாரியான கோகுல்தாஸ் கடையில் நுழைந்தான். கடைக்காரர், ஒரு பெரிய இடத்திலிருந்து. விலைக்கு வந்தது என்று, உயர்ந்த ப்ளுஜாக்கர் மோதிரம்: ஒன்றைக் காட்டினார். அதைப் பார்த்தவுடன் அதன் அழகு ஹரிக்கு மிகவும் பிடித்தது. அதற்கான எழுநூறு ரூபாயையும் கொடுத்து மோதிரத்துடன் நேரே கும்பேசு வரர் கோயிலுக்குச் சென்றான்.

  • -

கோயில் வழியாக வந்தபோது, ‘தம்பி என்று உரக்க அழைத்த வண்ணம், உயரமான ஜவுளிக் கடைத் திண்ணை யொன்றிலிருந்து கீழே குதித்த பக்கிரி, ஹரியை நோக்கிச் சிரித்தபடியே வேகமாக வந்தான்.

சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு. ஹநுமார்.

அந்தச் சமயத்தில், அந்த இடத்தில், சற்றும் எதிர் பாராமல் பக்கிரியைக் கண்டதும் ஹரி, எங்கே மாமா இப்படி இவ்வளவு தூரம்: கும்பகோணத்தில் இப்போது ஒன்றும் விசேஷங்கூட இல்லையே?’ என்று கேட்டான்.

ஏன் தம்பி, என்னை நீ, தேர்த் திருவிழாவிலேயே சுத்திக்கிட்டிருக்கிற பேர்வழின்னு நெனச்சே பேசிக்கிட்டி

ருக்கியே! என்று குறைப்பட்டுக் கொண்ட பக்கிரி, ஹரியின் கையிலிருந்த பையை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டினான். ஹரி, பரவாயில்லை’ என்று தானே

தூக்கிக் கொண்டு நடந்தான்.