பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 புல்லின் இதழ்கள்

பணத்துக்காகவா?’

“ஆமாம்.’

எங்கே பார்க்கலாம்?’

“மாயூரம் பட்டமங்கலத் தெருவில் ஒரு கல்யாணக் கச்சேரிக்கு வருகிறேன். ராத்திரி ரெயில்வே ஸ்டேஷனில் சந்திக்கலாம்.’

“சரி, அப்படியே ஆகட்டும். நான் நின்னுக்கறேன் தம்பி. ‘’

ஏன்? கும்பகோணத்திலே வேலை இருக்கிறதா?”

“ஆமாம். நம்ம ஊரு பத்தரோடு வந்திருக்கேன்.”

“சரி, நான் வருகிறேன்.’

நில்லு தம்பி. வண்டிகூட வச்சுக்காமெ; இப்படியே நடந்தா போவப் போறே?’

இல்லை மாமா. ஏதோ ஞாபகம். ஒரு வண்டி பாரு.’

பக்கிரி ஜட்காவைக் கூப்பிட்டு நிறுத்தினான். வண்டி சுவாமி மலையை நோக்கி ஓடியது. பக்கிரி மீண்டும் பாலத்தைத் தாண்டிப் பஜாரை நோக்கி நடந்தான்.

ஒடுகிற வண்டியோடு போட்டிப் போட்டுக் கொண்டு ஹரியின் சிந்தனைப் புரவியும் பறந்தது. தங்கைகளின் திருமணத்துக்காகப் பக்கிரிக்கு வாக்களித்த ரூபாயை எப்படிக் கொடுப்பது என்பது பற்றி அவன் யோசித்துக் கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் அவன் மனம் அவனையும் அறியாமல், காந்தாமணியைப் பற்றி நினைத்தது.

அவள் இருந்தால், அவனுக்குப் பணத்துக்குப் பஞ்சம் ஏது? இரண்டாயிரமோ மூவாயிரமோ தேவை: இத்தனை மாதங்களில் திருப்பித் தருகிறேன்’ என்று ஒரு வார்த்தை