பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 புல்லின் இதழ்கள்

குரல் செவிகளில் விழாத குற்றம் அல்ல; தன்னை ஏறெடுத்துப் பார்க்க விரும்பாத சீற்றமே-என்று வசந்தி எண்ணினாள். அவளுக்குத் தாளவில்லை.

-அப்படி நான் என்ன அம்மா தவறு செய்தேன்? உன் விருப்பத்துக்கு மாறாக, விருப்பம் இல்லாத காரியத் தில் இறங்தித் தகாதபடி நடந்து கொண்டேனா? என் நெஞ்சில் சிறுகச் சிறுக ஆசையை ஊட்டிப் பெருநிதிபோல் வளர்த்துவிட்டு, இன்று கள்ளனைப் போல் ஒருத்தி ஒரே நாளில் கவர்ந்து செல்ல அநுமதித்துவிட்டாயே! முடியாது. என்று மறுத்துக்கூடக் கூறாமல் வந்துவிட்டாயே. சுசீலா வைப் பற்றி அப்பா கூறியது நியாயம் என்று ஒப்புக் கொள்ள, எப்படி அம்மா உன் மனம் இடம் கொடுத்தது? அப்பட்டமான சுயநலம் அது என்று, பச்சைக் குழந்தை கூடச் சொல்லுமே! நானும் அவருடைய மகள்தானே? என் னுடைய துக்கமும் ஏமாற்றமும் ஏன் அம்மா அவர் கண்ணில். படவில்லை? ---

நான் சொல்லுகிறேன்-அப்பாவிற்கு சுவாமிமலைக் குடும்பந்தான் ஒசத்தி. என்னதான் நீ உயிராயிருந்தாலும், உரிமை கொண்டாடினாலும்; உனக்கும் எனக்கும் அப்பாவின் உள்ளத்தில் இரண்டாவது இடம்தான்.

இல்லாவிட்டால், ஹரி விஷயமாக என் ஆசையையும்: உன் விருப்பத்தையும் கேட்டறிந்து கொண்டு-"நல்ல காரியம்’ என்று ஒப்புக் கொண்ட விஷயத்தை, நிறைவேற்ற வேண்டுமென்று எண்ணாமல் இருப்பாரா?

எல்லாவற்றையும் விட, எனக்குப் போட்டியாகத் திடீரென்று புஸ்வாணம் மாதிரி, நான் ஹரியைத்தான் மணந்து கொள்வேன்’ என்று புறப்பட்டிருக்கிற சுசீலாவை அதட்டி அடக்காமல்: அல்லது ஹரி யாரை விரும்பு கிறான் என்பதைக் கூடக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல்சுசீலாவின் ஆசைக்குப் பச்சைக்கொடி காட்டியிருப்பாரா?