பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புல்லின் இதழ்கள்

கோயிலும் பாடுவதற்கு ஏற்ற ஆற்றங்கரை மண்டபமும் அவனுக்கு மிகவும் பிடித்தன. அக்கம்பக்கம் எங்கே சென்றாகிலும், வயிற்றுப்பாட்டை முடித்துக்கொண்டு, புடுக்கவும் பாடவும் மண்டபத்துக்கு வந்துவிடுவான். அப்படி நாட்களைக் கழித்தபோதுதான் ஒரு நாள் அவனை மகாவித்துவ்ான் சுப்பராம பாகவதர் வலிய வந்து ஆட்கொண்டார்.

‘ஹரி என்கிற குரலைக் கேட்டு, அத்தனை நேரம் நினைவுச் சுழலில் சிக்கித் தவித்தவ ன் சட்டென்று திரும்பிப் பார்த்தான். ---

கஞ்சிரா கோவிந்தராவ் நின்று கொண்டிருந்தார். என்ன ஹரி, வாத்தியார் ஊரில் இல்லையா? எந்த ஊரில் கச்சேரி?” என்ற அவருடைய கேள்விகளுக்கு ஒரே வார்த் தையில் பதிலளித்தான். ரெயிலுக்கு நேரமாகி விட்டதைக் கூறி, அவசர அவசரமாகத் துவைத்த துணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். பாதி வழி வரும்போதே, வீட்டின் ஞாபகமும், எண்ணெய்ப் பிரச்சினையும் நினைவுக்கு வரவே, ஹரிக்குப் பகீர்’ என்றது. வேகமாக நடந்து வந்த அவன் கால்கள் தாமாகவே பின்னலிட்டன. காயத்திரியும் சுசீலாவும் அவன் மனக் கண் முன் மாறிமாறித் தோன்றினர். வேதனையுடனேயே வீட்டுக்குள் நு ழை ந் த அவன் யாருடனும் பேசவில்லை. குருநாதருடைய துணிகளைக் கொல்லையில் அழகாக உதறிக் கொடியில் உலர்த்தினான்.

அவன் வருவதற்குள், சாப்பாட்டு அறையில் தயாராக அவனுக்குத் தட்டில் பலகாரமும் காபியும் இருந்தன. அவன் பாதி சாப்பிடும்போதே, ரெயிலுக்கு இன்னும் அரைமணி கூ- இல்லை’ என்று சுசீலா தாயிடம் குறை கூறிக்கொண் டிருந்தாள். ஹரி பலகாரம் பண்ணிக் கையை அலம்பியதும், லட்சுமி யம்மாள். ‘இத்தனை நேரம் காவிரியில் என்ன