பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 புல்லின் இதழ்கள்

துக்கும், அப்பாவின் வைத்தியத்துக்கும் செலவு செய்தாய்? அதைப் பற்றி நான் ஏதாவது கேட்டேனா? இறுதி யாக, நான் போட்டிருந்த வைர மோதிரத்தைக் கூடக் கொண்டுபோய் விற்றாயே அம்மா! ஆனால் அதே மோதிரத்தைச் சுசீலா எப்படியோ வாங்கித் தன் கையில் போட்டுக் கொண்டு என் எதிரிலேயே வந்து நின்றாளே! அப்போதெல்லாங்கூட உன்னிடம் குறைபட்டுக் கொண் டேனா? மோதிரம் என்ன, இன்னும் அவள் எதைக் கேட்டிருந்தாலும் நானே கொடுத்திருப்பேனே! பொறா மைக்காரி: என் உயிரையே அல்லவா என்னிடமிருந்து தட்டிப் பறித்துக்கொண்டு விட்டாள்? அதைப் பார்த்தும் ஏன் அம்மா உன் உள்ளம் குமுற வில்லை; இதயம் வெடிக்கவில்லை? உன் பெண்ணின் எதிர்கால நல்வாழ்வு உண் கண் எதிரிலேயே பறிபோகிறபோது ஒரு தாய்க்கு இருக்கவேண்டிய சராசரி உணர்ச்சிகூட உனக்கு ஏன் அம்மா அற்றுப் போய்விட்டது?’

குமுறும் எரிமலையாகத் தன் உள்ளத்து உணர்ச்சி களையெல்லாம் இப்படி அள்ளிக் கொட்ட வேண்டுமென்று ஆவேசத்துடன் துடித்த வசந்தி தாயின் முகத்தைக் கண்டதும் அப்படியே துவண்டு விழுந்து விட்டாள்.

“வசந்தி!’ என்று தாவி அணைத்துக் கொண்ட சுந்தரியின் ஊற்றுக் கண்களிலிருந்து மீண்டும் கண்ணிர் பெருக் கெடுத்தோடியது.

என்னை மன்னித்துவிடு வசந்தி. நானும் ஏமாந்து: உன்னையும் பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி விட்டேன், என்னை மன்னித்துவிடு, வசந்தி மன்னித்து விடு.’

இதயம் இதயத்திடம் முறையிட சுந்தரியின் கரங்கள் வசந்தியின் தலையை ஆறுதலாக வருடின.