பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 புல்லின் இதழ்கள்

அவசர அவசரமாகப் பிரித்துப் படித்த ஹரி, அப்பொழுதே பாகவதரை இழந்துவிட்டதைப் போல் நடுங்கி, சிலை போல் பிரமித்து நின்று விட்டான்.

- அப்பாவுக்கு உடம்பு மிகவும் கவலைக்கிடம், உடனே வருக. சுசீலா.

ஹரியின் பதற்றத்தையும் தவிப்பையும் கண்ட மூர்த்தியும், காரியதரிசியும், “என்ன ஸார் விஷயம்?” என்று மிக்க கவலையுடன் விசாரித்தனர்.

தந்தியை ஹரி அவர்களிடம் நீட்டினான். சபாக் காரிய தரிசியிடம், பாகவதரின் உடல் நிலை பற்றிய விவரம் தெரிந்து கொண்ட மூர்த்தி கூறினார்: ‘பாகவதருக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள். எங்கள் வேனை’ அனுப்புகிறேன். உடனே புறப்படுங்கள். மெட்ராஸில் என் தம்பி இந்த சிகிச்சையில் ரொம்பக் கெட்டிக்காரன். பெரிய நர்சிங்ஹோம் வைத்திருக்கிறான். எப்படியாவது பாகவதரை வேனிலேயே அங்கே அழைத்துச் சென்றால் நல்லது.’

இவ்வாறு கூறிய மூர்த்தி, தன் தம்பி சேகருக்கு அவசர மாகக் கடிதம் ஒன்று எழுதி, விலாசத்துடன் ஹரியிடம் கொடுத்தார்.

மூர்த்தியின் வேன்’ சுவாமிமலை வீட்டை அடைந்த போது வாசலில் இரண்டு மூன்று கார்கள் நின்று கொண் டிருந்தன. அச்சத்துடன் உள்ளே விரைந்த ஹரியைக் கண்ட லட்சுமி அம்மாள் வாய் விட்டே அழுதுவிட்டாள்.

பாகவதரின் கட்டிலின் அருகில் குடும்ப டாக்டரும் கும்பகோணத்திலிருந்து வந்துள்ள பெரிய டாக்டர் ஒருவரும், ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். லட்சுமியம் மாளையும் ஹரியையும் தனியாக அழைத்துக் குடும்ப