பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 புல்லின் இதழ்கள்

சுந்தரியும் லட்சுமியும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர்.

ஹரி, தம்புராவைக் காரிலிருந்து எடுத்துக் கொண்டு, உள்ளே வந்தபோது விழித்துக் கொண்ட பாகவதர், வா, இப்போதுதான் வருகிறாயா?’ என்று வரவேற்றார்.

பிறகு, பஞ்சு அண்ணாவையும் ராஜப்பாவையும் பார்த்து, பெங்களுர்க் கச்சேரி எப்படி அமைந்தது. நாளைக்கு உங்களுக்கு மைசூரில் கச்சேரி ஆயிற்றே; எப்படி வந்தீர்கள்? கான்ஸல் ஆகிவிட்டதா?’ என்று காலண் டரைப் பார்த்துக் கேட்டார்.

அருகில் உட்கார்ந்து கொண்டு பஞ்சு அண்ணா பாக வதரை அலட்டிக் கொள்ளக் கூடாது என்று தடுத்து, எல்லா விவரங்களையும் ஆதியோடந்தமாகக் கூறி, இன்னும் சற்றைக்கெல்லாம் நீங்கள் பட்டணம் புறப்படப் போகிறீர்

கள்’’ என்று நிறுத்தினார்.

இதைக் கேட்டதும் பாகவதர் சிரித்தார்.

  • என்ன சிரிக்கிறீர்கள்? இந்தப் பூட்டுக்குப் பிழைத்துக் கொண்டு விட்டோம்: பார்த்துக் கொள்ளலாம் என்றா?

டாக்டர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். நீங்கள் பட்டணம் போய்த்தான் ஆக வேண்டும்’ என்றார் பஞ்சு அண்ணா.

பூட்டாவது, சாவியாவது பஞ்சு? இத்தோடு எத்தனை பூட்டுக்களாச்சு? அடுத்த பூட்டோ அல்லது அதற்கடுத்த பூட்டோ இல்லை என்றால், எனக்குப் பூட்டுக்களே இல்லையோ என்னவோ. பாபிக்கு சதாயுசு என்பார்களே, இண்னும் உலகத்தில் என்னவெல்லாம் பார்த்து அநுபவிக்க வேண்டியது பாக்கி இருக்கிறதோ: அதையெல்லாம் பாக்கி வைத்து விட்டுப் போனால் எப்படி? நான் இந்த இடத்தை விட்டு எங்கும் ஒர் அடி கூட வர