பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்தி வத்தது 381

மாட்டேன். எனக்கு இனிமேல், எந்த மருந்தும் வேண் டாம். வைத்தியமும் வேண்டாம். கடைசிக் காலத்தில் இந்தக் கட்டைக்குக் காவேரிக் கரையில் எரிகிற பாக்கிய மாவது கிடைக்கட்டும். இந்த ஜென்மம் கடைத்தேற அதை விடச் சிறந்த வைத்தியமே இல்லை. என்னை ஓர் இடத்துக்கும் இமுக்காதீர்கள்’’ என்று விரக்தியாகப் பேசினார் பாகவதர்.

பாகவதருடைய வார்த்தைகள், லட்சுமியம்மாளையும் சுந்தரியையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தின. பாகவதர் இப்படிப் பிடிவாதம் செய்வார் என்று பஞ்சு அண்ணாவும் மற்றவர்களும் எதிர் பார்க்கவில்லை. ஆயினும் அவர் கருத்தை அங்கே யாரும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.

‘அண்ணா, உங்களுடைய நல்ல மனத்துக்கு ஒரு விதக் குறைவும் வராது, வரக்கூடாது என்பதுதான் எங்கள் எல்லாருடைய பிராத்தனையும். இங்கே உங்களை நம்பி யிருக்கும் இந்த வீட்டிலுள்ளவர்களை மட்டும் மனத்தில் வைத்துக் கொண்டு நான் பேசவில்லை.

‘நீங்கள் முன் போலக் கச்சேரி செய்ய வேண்டும்; உங்களுடைய இசையைப் பருக வேண்டும் என்று சங்கீத உலகமே ஆவலுடன் வேண்டுகிறது. உங்கள் ரசிகர் களுடைய அபிமானம் வீண் போகவில்லை. உங்களுடைய வியாதி குணமாகப் போகிறது; நீங்கள் முன் போல் தொழில் செய்யப் போகிறீர்கள்; அதற்கான வேளை வந்துவிட்டது.

‘பங்களூரில் உங்களுடைய ரசிகர் ஒருவர், ஹரியின் பாட்டைக் கேட்டு பரவசமாகிப் பட்டணம் போக காரும், சிபாரிசுக் கடிதமும் கொடுத்திருக்கிறார். எங்களுக்காக