பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S82 புல்லின் இதழ்கள்

இல்லாவிட்டாலும் இப்படிப்பட்ட அன்பர்களுக்காகவாவது நீங்கள் எங்கள் பேச்சைக் கேட்கக் கூடாதா? இந்தப் பாக்கியம் எல்லாருக்குமா கிடைத்து விடுகிறது?’ என்று பஞ்சு அண்ணா விடாப் பிடியாகக் கூறி பாகவதரைச் ‘சம்மதிக்க வைத்து விட்டார்.

அதற்குப் பிறகு பிரச்னைகள் வேறு திசையை நோக்கித் திரும்பின.

பட்டணத்துக்கு யார் போவது, யாரை இங்கே வைத்து விட்டுப் போவது என்று யோசித்தார்கள். ஹரியும் லட்சுமியும் பாகவதருடன் செல்ல வேண்டியவர்கள் என்று ஆனபிறகு, காயத்திரியையும் சுசீலாவையும் தனியே வைத்து விட்டுப் போக லட்சுமியம்மாள் விரும்பவில்லை.

சுசீலா, தகப்பனாருடன் பட்டணம் போகத் துடித் துக்கொண்டிருப்பதை நன்கு காட்டிக் கொண்டாள்.

அங்கே என்ன, இடம் பிடிக்க வேண்டுமா, வீடு பார்க்க வேண்டுமா? எல்லாருமே புறப்பட்டுப் போவது தான் நல்லது என்று பஞ்சு அண்ணாவே முடிவு செய்து விடவே, சுசீலாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

இரவு சாப்பாடெல்லாம் ஆனபிறகு, பதினொரு மணிக்குப் புறப்படுவதாக முடிவாயிற்று. அதற்குள் திரு விடைமருதுாரிலிருந்து வசந்தியும் வந்து சேர்ந்தாள்.

பாகவதரும் லட்சுமியம்மாளும் பின் சீட்டில் ஏறிக் கொண்டனர். அவர்களுக்குப் பக்கத்தில் சுசீலாவும், காயத்திரியும் அமர்ந்திருந்தனர்.

ஹரி, சுந்தரியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். சுந்தரியின் விழிகள் பனித்தன.