பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தி வந்தது 383

  • பட்டணம் போய்ச் சேர்ந்ததும் ஐயாவின் உடல் நிலைக்குக் கடிதம் எழுதுகிறேன் அம்மா...’
  • எல்லாம் நீதான் இனிமேல் ஐயாவுக்கு. அவரை உன் கையில் ஒப்படைத்தாகி விட்டது. அவரை கவனித்துக் கொள்ள வேண்டியது முழுக்க முழுக்க உன் பொறுப்புத் தான். கவலைப்படத்தான் நாங்கள் எல்லாரும் இருக் கிறோம்; எங்களால் என்ன பிரயோசனம்?’ இந்த வார்த்தைகளைக் கூறி முடிக்குமுன் சுந்தரியின் குரல் கர கரத்தது.

“ஏன் வசந்தி, என் மீது கோபமா?’ என்று ஹரி அவளிடம் மெல்லக் கேட்டான். பதில் கூறாமல் இரு கை களிலும் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுத வண்ணம் அவள் உள்ளே சென்று விட்டாள்.

வண்டி உனக்காக நிற்கிறது; சீக்கிரம் புறப்படு, ஹரி என்ற வண்ணம் சுந்தரி மடியிலிருந்து ஐந்நூறு ரூபாய் பணத்தை எடுத்து, எதற்கும் இதை நீ கையோடு வைத்துக் கொள்” என்று ஹரியிடம் நீட்டினாள்.

வேண்டாம் சின்னம்மா. பங்களுர்க் கச்சேரிப் பணம் பையிலேயே இருக்கிறது. பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று சுந்தரியின் மனம் நோகாதபடி கூறிவிட்டு, ‘வரு கிறேன் வசந்தி; வாத்தியாரிடம் கோபமே கூடாது’ என்று அவள் இருந்த திசையை நோக்கிக் கூறிவிட்டு காரில் முன் சீட்டில் ஏறிக் கொண்டான்.

கார் புறப்படும் போது, லட்சுமியருகில் வந்து சுந்தரி நின்று கொண்டிருந்தாள். பாகவதரும் லட்சுமியும் விடை பெற்றுக் கொண்டனர். சுசீலாவும் காயத்திரியும், ‘போய் விட்டு வருகிறோம் சித்தி’ என்று ஏக காலத்தில் விடை பெற்றுக் கொண்டனர்.