பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டபச் சாதகன் 33.

பண்ணினாய் ஹரி? ஐயா இன்று ஊரிலிருந்து வருவது மறந்து விட்டதா?’ என்று சுசீலாவின் ஆறுதலுக்காக இரண்டொரு கேள்விகளைக் கேட்டாள்,

அதற்குள் சுசீலா, வீட்டில் இத்தனை நேரம், பொழுது விடியும்வரை கத்தினது போதாதென்று, மண்ட பத்திலும் போய்ப் பாடினானோ என்னவோ? பழக்க தோஷம் எங்கே போகும்? பட்டிணத்திலிருந்து வருகிற அப்பாவுக்கு, ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வரவா வழி தெரியாது? யாரும் ரெயிலுக்குப் போக வேண்டாம்’ என்று ஒரு குட்டி உத்தரவு போட்டாள். இத்தனைக்கும் ஹரி வாயே திறக்கவில்லை.

பதில் பேசாமல், சட்டையை மாட்டிக்கொண்டு அவன் வேகமாக ஸ்டேஷனை நோக்கி நடந்தான். ஆனால் அவன் வருவதற்குள், ரெயில் ஸ்டேஷனில் வந்து நின்றிருந்தது. பிரயாணிகளில் சிலர் நடந்தும், வண்டியில் ஏறியும் வெளியே சென்றனர்,

ஹரி, எஞ்சினுக்கும், கார்டு வானுக்குமாக இரண்டு மூன்று முறை தேடி ஒடி அலைந்து பார்த்தான். குரு. நாதரைக் காணவில்லை, -