பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டணப் பிரவேசம் 391

அன்றே ஹரி சுந்தரிக்குக் கடிதம் எழுதினான். இங்கு டாக்டர் வீட்டில் தங்களுக்கு ராஜ உபசாரம் நட்ப்பது பற்றியும், எப்படியும் ஆறு ஏழு மாதங்களுக்குக் குறை யாமல் இங்கேயே தங்கி இருக்க வேண்டுமென்று டாக்டர் அபிப்பிராயப்படுவதாகவும் எழுதியதோடு, வசந்திக்கு ஆசி கூறிக் கடிதத்தை முடித்திருந்தான்.

ரோஸ் கார்டன்ஸில் பல நாளாய்ப் பூட்டிக் கிடந்த அவுட் ஹவுஸ் சுத்தம் செய்யப்பட்டு அவர்கள் இருப்பிடம் ஆயிற்று. ஹரிக்குத் தனியாக ஒர் அறை கிடைத்தது. அதில் தம்புராவையும் சாமான்களையும் வைத்துக் கொண்டான். டாக்டருக்கும் சந்திராவுக்கும் துளிக்கூட ஆட்சேபம் இல்லை என்று அறிந்து கொண்டவுடன், தன் அசுர சாதகத்தை ஆரம்பித்து விட்டான். சந்திராவும், சேகரும், ஒரு பெரிய வித்துவானைத் தங்கள் வீட்டோடு வைத்துக் கொண்டு விட்டது பற்றி மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர்.

சிறுகச் சிறுகச் சந்திராவுக்கு சுசீலாவின் திருமண விஷயம் தெரிந்துவிட்டது. அதன் பிறகு அவள் சுசீலா வையும் ஹரியையும் சேர்ந்து காணும்போதெல்லாம் கேலி பண்ணத் தொடங்கினாள். பங்களுர் அத்தான் வந்ததும் கல்யாணத்தை முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்” என்று அடிக்கடிக் கூறிச் சுசீலாவை ஹரியின் எதிரிலேயே வர முடியாமல் பண்ணி விட்டாள்.

ஒரு நாள், சந்திராவும் லட்சுமியும் வெளியே போயி ருந்தனர். ஹரி தனியாக இருந்தான். சோபவில் உட்கார்ந்து. ஒரு புத்தகத்தை எடுத்தான். அது ஒரு நாவல். பாதி படித்தபடி பிரித்து வைத்திருந்தது. புத்த கத்தின் சில பக்கங்களில், பென்சிலால் அங்கங்கே சிறு சிறு கோடுகள் இழுக்கப்பட்டிருந்தன.

ஹரி ஒன்றைப் படித்தான்: