பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 புல்லின் இதழ்கள்

- மாந்தரின் மனம் கொடியைப் போன்றது. அன்பு கண்டவுடன் அது படரத் துவங்கிவிடுகிறது.”

ஹரிக்கு அந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தன. ஒரு முழுச் சாப்பாட்டிலுள்ள அத்தனை சத்தையும், ஒரு சிறு மாத்திரைக்குள் அடைத்துக் கொடுத்துவிடு கிறார்களே அப்படி, அந்தப் புத்தகத்திலுள்ள சிறப்பான கருத்துக்கள் எல்லாம் அந்த இரு பக்கத்துச் சிறு சிறு பென்சில் கோட்டுக்குள் அடக்கம் போலும் என்று ஆவ லோடு மற்றொன்றைப் படித்தான்.

இன்றையத் தவறுக்குக் காரணமாக இருக்கின்ற நேற்றைய நிசழ்ச்சிகள்; நாளையமெளனம், மனச்சோர்வு தோல்வி, அல்லது வெற்றி இவற்றுக்குச் எச்சரிக்கை அல்லது வழி காட்டிகளே. -

ஹரி இந்த வாக்கியத்தை மிகவும் ரசித்து மீண்டும் ஒரு முறை படித்துக் கொண்டிருந்தான் டெலிபோன் மணி கணகணவென்று ஒலித்தது.

சட்டென்று ரிஸிவரைக் கையில் எடுத்து, “ஹலோ” என்றான்.

டாக்டர் இருக்கிறாரா?’

டெலிபோன் மறு முனையிலிருந்து கேள்வி பிறந்தது. கேள்வியை எழுப்பியவள் ஒரு பெண். அவளுடைய குரல் ஹரியின் மூளையைச் சென்று தாக்கியது. எங்கோ கேட்டது போலப் பிரமை. ஹரி சட்டென்று சமாளித் துக்கொண்டு கேட்டான்: ‘டாக்டர் இல்லை. தாங்கள் யார் என்று சொல்லுவது’.

காந்தாமணி என்று சொல்லுங்கள்.’ அவள் போனை வைத்துவிட்டாள்.

ஹரியின் கையில் இருந்த ரிளtவர் நழுவியது.