பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 புல்லின் இதழ்கள்

போது நிலைமை முற்றும் மாறித் திருமண கட்டத்துக்கு முன்னேறி, பார்க்கிறவர்கள் எங்களைப் பரிகசிக்கிற அளவுக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு சுசீலா என் னிடம் அன்பும் நம்பிக்கையும் காட்ட ஆரம்பித்துவிட் டாள். இந்தச் சமயத்திலா காந்தாமணி வந்து சேர வேண்டும்? ஆனால் காந்தாமணியைப் பற்றி இப்படி நினைப்பது தவறல்லவா? பாவம்! அவள் எவ்வளவு நெருக்கடியான சமயங்களில் உதவினாள்? அவளைப்போல் அன்பும் வெள்ளையுள்ளமும் படைத்த பெண்ணைக் காண முடியுமா? என்னால் நேர்ந்த அதிர்ச்சியைத் தாங்கமாட் டாமல், வீடுவாசல், பிறந்த மண் அனைத்தையுமே துறந்து விலகிப் போய்விட்டவளாயிற்றே!

கலைஞர்களில் நான் மாறுபட்டவன். தொட்டதற் கெல்லாம் குருவின் பெயரைச் சொல்லிக்கொண்டு, தனக் கென்று சொந்த விருப்பு வெறுப்புகள் வைத்துக்கொள் ளாத ஒரு மரக்கட்டை என்று அறிந்துகொள்ள நேரிட்ட அவளுடைய அநுபவந்தான்; எத்தனை கொடுமையானது? ஆனால் என் வரையில் அதுவே புனிதமானது அல்லவா? -

தம்பி’ என்ற பழக்கமான குரலைக் கேட்டுப் படுத் துக்கொண்டிருந்த ஹரி தலை நிமிர்ந்தான். எதிரே பக்கிரி பவ்யமாக நின்று கொண்டிருந்தான்.

உள்ளே வா, மாமா’ என்று ஹரி அழைத்தான். பக்கிரி தயங்கித் தயங்கி உள்ளே வந்தான். என்ன தம்பி, இந்த மாதிரி பண்ணிப்பிட்டே?” என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

  • எந்த மாதிரிப் பண்ணிவிட்டேன்? கல்யாண வீட்டுக் காரர்களிடம் போய்ச் சாயங்காலம், நான் எங்கே என்று விசாரித்தாயாமே? இதெல்லாம் என்ன பழக்கம்.'