பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 புல்லின் இதழ்கள்

வர்ரதா இருந்தேன். நம்முடைய விஷயத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு விடுவோம். யாசகம் கேட்கிற மாதிரி நீ என் பின்னாலேயே ஒவ்வொரு தடவையும் சுற்றிக்கொண்டு இருக்கவும் வேண்டாம்: கடன் வாங்கி விட்டவனைப் போல் என்னைப் பற்றி நீ எல்லாரிடமும் விசாரித்துக் கொண்டு இருக்கவும் வேண்டாம்; அதற்கு ஒரு வழி பண்ணி விட்டேன். ‘

சரி, தம்பி.’

ஹரி பெட்டியிலிருந்து நோட்டுக் கட்டை எடுத்து பக்கிரியின் கையில் கொடுத்தான். அதில், தையல் பிரிக்கப் படாத புத்தம் புதிய பத்து ரூபாய் நோட்டுகளாக பல கட்டுகள் இருந்தன.

இதைச் சித்தியிடம் கொடு மாமா. முதலில் தங்கைகள் கல்யாணத்தை சிறப்பாக முடித்துக்கொள் மீதிப் பணத்தைக் கொண்டு குடும்பத்தை நன்றாகக் கூட இருந்து நடத்த வேண்டியது உன் பொறுப்பு, உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடிந்தது இவ்வளவுதான். நீ இனிமேல் என்னைத் தேடவோ, பனம் கேட்கவோ அலைய வேண்டாம். ‘

பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கையில் வாங்கிக் கொண்ட பக்கிரி பிரமித்து நின்றான்; அவன் கண்கள் கலங்கின.

இவ்வளவும் எங்களுக்கா தம்பி?’’

“அதுதான் எல்லா விவரமும் சொன்னேனே. LD L. **

‘இத்தனைப் பணத்தை ஒருமுட்டா எப்பத் தம்பி பார்த்திருக்கோம்?”

பரவாயில்லை; பழைய தொழிலை மட்டும்....?'