பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. காந்தாமணியின் கடிதம்

காலம் ஒடிக்கொண்டே இருக்கிறது. உருண்டு விழுந் தவன் எழுந்திருக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக் கிறது. ஒடட்டுமே! -

உள்ளுரிலும் சரி, வெளியூர்களிலும் சரி, ஹரி ஒவ்வொரு கச்சேரிக்கும் சுசீலாவையும் கூடவே அழைத்துக் கொண்டு சென்றான்; அவனோடு சேர்ந்து அவள் போகாத இடம் இல்லை; பார்க்காத ஊர் இல்லை. சுசீலா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒரு நாள் ஹரி கேட்டான்: “அவரவர்களுக்கு உரிய பொருளை அவரவர்களிடம் சேர்த்துவிட வேண்டாமா? இனியும் எனக்கு வந்த காந்தாமணியின் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு, என் கண்ணில் காட்டாமல் இருக்க “"LDrr 576A2 .

அவ்வளவுதான், ஹரி இதைக் கேட்டு முடிப்பதற்குள், ஐப்பசி மாதத்து ஆகாயம்போல் எங்கிருந்தோ குபிர் என்று பொங்கி வந்த துயரம் அவள் உள்ளத்தை அப்பிக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கிவிட்டாள். அதன் பிறகு ஹரி எத்தனை முயன்றும் அவளைச் சமாதானம் செய்ய முடியவில்லை.

  • கடிதத்தை நான் உன்னிடம் கேட்பது பிசகு. அதை நீ என்னிடம் கொடுக்கவே வேண்டாம். தவறாக எண்ணி அழக்கூடாது’ என்று கெஞ்சினான்.