பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தாமணியின் கடிதம் 405

‘இல்லமால் இருந்தால் சரிதான். இககே வா’ “ என்று அழைத்த காயத்திரி, உள்ளே இருந்த சுசீலாவின் காதில் விழாதவாறு ஹரியிடம் ஒன்று கூறினாள்: அதைக் கேட்டதும் ஹரி திடுக்கிட்டான்.

‘பார்த்தாயா? அதுதான் நான் உன்னிடம் இதுநாள் வரை சொல்லவில்லை. சொன்னபடி அலட்டிக்கொள் ளாமல் இரு. சாயங்காலம் அடையாற்றில் கச்சேரி இருக்கிறது இல்லையா?”

“ஆமாம், பிறந்த நாள் கச்சேரி. பெரிய மிராசுதா ருடைய பங்களாவில். அவர் யார் தெரியுமா?’’

“எனக்கு எப்படித் தெரியும்?’ ‘

‘பூங்குளம் சின்ன மைனர் என்று பெயர். பெரிய பணக்காரர். சிறந்த சங்கீத ரசிகருங்கூட. அவர் தந்தை யின் திருமணந்தான், நான் அப்பாவை வந்து அடைவதற்கு வழிகாட்டியாக இருந்தது’ என்று பழைய கதையை நினைப்பூட்டிவிட்டு, கச்சேரிக்கு சுசீலாவையும் அழைத்துக் கொண்டு போகவா?’ என்றான் ஹரி.

‘அவளைச் சமாதானம் பண்ண அதுதான் வழி. இனிமேல் பட்டணத்துக் கச்சேரிகளுக்கெல்லாம் எங்கே வர முடியும்? சுற்றிச் சுற்றி சுவாமி மலைதான்’ என்றாள் காயத்திரி.

‘நீங்களும் வருகிறீர்களா அக்கா?’’

அழகுதான்; மறுபடியும் சண்டைக்கு அஸ்திவாரம் போடுகிறாறா? இன்னும் நாலு நாள் பொழுதைக் கெளரவ மாக ஒட்டிவிட்டு ஊரைப் பார்த்துப் புறப்பட வேண்டுமே என்று சுவாமியை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.'"