பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 புல்லின் இதழ்கள்

எதிரில் வந்து நின்ற சுசீலாவைக் கண்டு ஹரி கிறங் கிப்போனான். பொங்கி வழியும் இத்தனை அழகையும் இவ்வளவு நாள் எங்கே ஒளித்து வைத்திருந்தாள்!” என்று அவன் வியப்புடனேயே சுசீலாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்

அரண்மனை மாதிரி இருந்த மைனரின் பங்களா விசேஷ அலங்காரங்களுடன் காட்சியளித்தது. ஹரியும் சுசிலாவும் காரிலிருந்து இறங்சியதுமே காரியஸ்தர்கள் அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

பூங்குளம் சின்ன மைனர் ஹரியையும் சுசீலாவையும் அன்புடன் வரவேற்று அருகிலேயே அமர்த்திக் கொண்டார். மைனருக்குப் பின்னால் இடுப்பில் குழந்தையுடன் நின்ற காந்தாமணியைப் பார்த்ததும் ஹரி திடுக்கிட்டான். சுசீலாவோ அவள் அழகைக் கண்டு பிரமித்து கண்ணை இமைக்கவும் மறந்தாள். ஹரிக்கு எல்லாமே புரிந்து விட்டது.

மன்னிக்க வேண்டும், உடம்பு சரியில்லாததினால் தான் உங்களை வாசலிலேயே வந்து வரவேற்க வரமுடிய வில்லை’ என்று மைனர் சொன்னபோது ஹரி அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

காந்தாமணி குழந்தையைக் கையிலிருந்து இறக்கி விட்டு, அருகில் இருந்த வெள்ளித் தட்டைச் சுசீலாவின் கையில் கொடுத்து, ஹரியையும், சுசீலாவையும் தனித் தனியாக வணங்கினாள்.

கச்சேரிப் பணம் என்று எண்ணிவிடாதீர்கள். இது என் மனைவி காந்தாமணியின் குருதட்சிணை’ என்று சிரித்துக் கொண்டே கூறினார் மைனர்.