பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 புல்லின் இதழ்கள்

யைத் திறந்தாள், கடிதம் கடிதம் என்று நிதம் ஒரு சண்டை போட்டீர்களே, இதோ இருக்கிறது: இது உங்களுக்கு வந்த கடிதமா? என் அக்காவுக்கு வந்தது; அதைக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக் கிறது? போனால் போகிறது. இந்தாருங்கள் காந்தாமணி அம்மாள் என்ன எழுதியிருக்கிறாள் என்று படித்துப் பாருங்கள்!’ என்றாள் சுசீலா ஒய்யாரமாக.

ஹரி வேகமாகக் கடிதத்தைப் படித்தான்:

‘அன்புள்ள காயத்திரி அக்கா அவர்களுக்கு காந்தா மணி வணக்கமாக எழுதியது. தங்கள் கடிதம் கிடைத் தது. தாங்கள் என்னைப்பற்றி மட்டும் அல்ல, ஹரி அவர்களைப் பற்றியும் தவறுதலாக எண்ணிவிட்டீர்கள். குருவை மீறி, ஹரி அவர்களால் ஒரு தவறும் செய்ய முடியாது என்பதைத் தாங்கள் நம்ப வேண்டும். என்னைப் பற்றிய வரையில் பயப்படாதீர்கள். நான் விலக்கி கொள்கிறேன். -