பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. சக்திரோதயம்

சுந்தரி ஆரத்தியுடன் நின்றுகொண்டிருந்தாள். அன்றுதான், பட்டனத்திலிருந்து பாகவதர், எல்லோரும்

சுவாமிமலைக்கு வருகிறார்கள். வீடெல்லாம் பெருக்கி மெழுகி மாக்கோலம் போட்டு; இத்தனை நாள் குடியில் லாத சோடே இல்லாமல், கல்யாணம் அங்கேதான்

நடந்தது போல் அத்தனை அழகாக இருந்தது.

பளிச்சென்று காரிலிருந்து இறங்கி கீழே வந்த கணவரைப் பார்த்துச் சுந்தரி அதிசயித்து நின்றாள். பாகவதர் சிரித்துக்கொண்டே கேட்டார்: “என்ன விழிக் கிறாய், சுந்தரி? பட்டணத்துக்குப் போய், பொய்க்கால் வைத்துக் கொண்டு வந்துவிட்டேனா, என்றா?’’

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத சுந்தரி, சுசீலாவை மெதுவாகக் கையைப் பிடித்து, மெல்ல உள்ளே அழைத்துச் சென்றாள்.

சித்தி, நமஸ்காரம் பண்ணுகிறோம்.’

ஹரியும் சுசீலாவும் சேர்ந்து, சுந்தரியின் பாதங் களைத் தொட்டு வணங்கினர். அவள் மனப்பூர்வமாக அவர்களை வாழ்த்தினாள். ஆயினும் துக்கம் அவளையும் மீறி உள்ளத்தில் கிட்டி கட்டியது, இதே காட்சியை வசந்தியும் ஹரியுமாய்க் காண எத்தனையோ நாட்களாகக் கனவு கண்டு வந்தவள்; அந்தக்காட்சியைச் சற்றே மாறு