பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாத்திரங்களோடு கண்முன் கண்டபோது L அவளையும் மீறி இப்போதும் உள்ளத்தினுள்ளயே கலங்கத்தான் செய்தது. இமைக்காமல், சிறிது நேரம் சுலோ எழுந்து செல்வதையே சுந்தரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாரி இறைத்தது போல் அழகு சுசீலாவின் அங்க மெல்லாம் வழிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு புதிய உலகத்தைக் கண்டு விட்டவள் போலவும், உலகத்திலுள்ள இன்பங்கள், தன்னையே தேடி அடைய விருப்பிச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பது போலவும், அவள் முகம் பிரகாசமாக இருந்தது. அவளுடைய நடையில், நடையின் அசைவில், பார்வையில், பார்க்கும் விழிகளில் ஒவ் வொன்றிலும் அழகும் பாவமும் மிளிர்ந்தன. மஞ்சள் நிற மேனி, மேலும் பொன்னிறம் கூட்டியது. கருநாகப் பாம்பு போன்று சுருண்டு நீண்ட கூந்தல் காரில் உட்கார்ந்து வந்ததில் அடிபட்ட பாம்பு போல், நசுங்கிய படி காட்சியளித்தது.

காயத்திரி அடுப்பை மூட்டி, அவசர அவசரமாக ஆக வேண்டிய காரியங்களில் மூழ்கிப் போயிருந்தாள்.

‘ என்னால் பத்து நாளைக்கு இனிமேல் ஒன்றுமே முடியாதம்மா’ என்று லட்சுமியம்மாள் கூடத்தில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். அதற்கு வெகு நேரத்துக்கு முன்பே, சுசீலா மணைப் பலகையைத் தலைக்கு வைத்துக் கொண்டு அரைத் தூக்கம் போட்டுவிட்டாள். விலைக்கு வாங்கி வந்த பாலை ஹரி அடுக்களையில் கொண்டு போய்க் கொடுத்தான். கால் முளைத்ததும் பாகவதர் வீடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து கொண்

டிருந்தார்.