பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரோதயம் 419

அப்படித்தான் இருந்தேன், சுசீலா. ஆனால் வரவர,

இப்போது உன்னைத் தவிரக் கச்சேரி நினைவே இல்லை.

பாட உட்கார்ந்தால் உன் ஞாபகந்தான் வருகிறது.’

‘அப்படியானால் நான் உங்களுக்கு இடைஞ் சல் என்கிறீர்களா? உங்கள் சங்கீதத்துக்குக் குறுக்கே நிற் கிறேன் என்கிறீர்களா?’

‘'நீ எனக்கு இடைஞ்சலா? நீ இல்லாமல் என்னால் இனிப் பாட முடியுமா? பட்டணத்தில் உன்னைக் கூடவே அழைத்துப் போய்ப் பழக்கமாகி விட்ட தா? கச்சேரியில், கண் உன்னைத் தேடுகிறது. அந்த இடம் இனிச் சூனியமாக இருக்க வேண்டியதுதானே?'-எப் படியோ அவனுக்கே தெரியாமல்-அவன் குரலில் அபசுவரம்

தட்டிவிட்டது.

“ஏன் சூனியமாக இருக்கவேண்டும்?’ - சுசீலா பளிச்சென்று கேட்டாள்: ‘குழந்தை பிறந்து விட்டால் நான் உங்களுடன் கச்சேரிக்கு வரக்கூடாதா? நீங்கள் பாடுகிற இடத்தில் நானும் இருப்பேன்.” இதைக் கூறும்போது சுசீலாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

  • எல்லாரையும் ஏமாற்றி நான் உங்களை அடைந்து விட்டேன். வசந்திக்கு அந்தக் கோபம் இந்த நிமிஷம் வரையில் தீரவில்லை. கல்யாணத்திற்குத்தான் அத்தனை அழைத்தும் வரவில்லை, போகட்டும். குழந்தை பிறந்த செய்தி தெரிந்த பிறகாவது பார்க்க வந்தாளா? நான் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு முள்ளைப்போல் குறுக் கிட்டேன். ஆனால் அதுதான் எவ்வளவு பெரிய உண்மை. பாவம் வசந்தி! உங்களிடம் அவள் எத்தனை ஆசை வைத்திருந்தாள் என்பதை என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. நியாயமாக உங்களுடன் வாழி