பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 புல்லின் இதழ்கள்

ஆம்! காரண காரியங்களுடனேயே ஒவ்வொரு உயிரையும் படைக்கும் இறைவன் தன்னுடைய அந்த விசையினின்றும் பிறழவோ, பிறர் அதில் குறுக்கிடவோ அநுமதிப்பானா? அதற்கு ஹரியும் விலக்கல்லவே!

இசைக்காகப் பிறந்த ஹரியால் இசையை எப்படி மறக்க முடியும்? உலகத்துத் துன்பங்களை எல்லாம் துடைக்க வல்லது இசை என்றால், அந்த இசைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஹரியின் உள்ளத் துயரைத் துடைப்பதா இசைக்குக் கஷ்டம்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த வீட்டில் இசை முழங்கிற்று.

காயத்திரி, கையில் சுசீலாவின் குழந்தையை வைத்துக் கொண்டு, வெள்ளிக் கும்பாவில் இருக்கும் பாலுஞ் சாதத்தை, அம்புலி மாமாவைக் காட்டிக் காட்டி ஊட்டிக் கொண்டிருந்தாள்.

பாகவதருடைய அறையில் அவருடைய கால்மாட்டில் லட்சுமியம்மாள் உட்கார்ந்திருந்தாள். சுந்தரி கூடத்தில் தூணில் சாய்ந்து கொண்டிருந்தாள்.

ஹரியின் எதிரில் வசந்தி தம்பூராவை எடுத்து வைத் துக்கொண்டு மீட்டிக்கொண்டிருந்தாள்.

இனிப் பாடவே போவதில்லை என்றவன் பாட்டா கவே மாறிவிட்டான். இசை, இசை ஒரே இசை, வசந்

தியும் ஹரியுடனே சேர்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.

“புல்லாய்ப் பிறவி தரவேணும், கண்ணா புனித மான பலகோடி பிறவி தந்தாலும் - பிருந்தாவன மீதி லொரு புல்லாய்ப் பிறவி தரவேணும், கண்ணா’ என்று திரும்பத் திரும்ப ஹரி பாடியபோது சுசீலாவும் வசந்தியின்