பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புல்லின் இதழ்கள்

கல்வியறிவு இல்லாமல் தம்மிடம் வந்த அவனைக் காயத்திரியைக் கொண்டு ஆரம்பப் பாடங்களைக் கற்பித்துப் பிறகு சுசீலாவுக்கு வரும் பிரைவேட் வாத்தியாரிடமும் ஹரியை ஒப்படைத்து, அவனுக்குப் பூரண கல்வி ஞானத்தை ஏற்படுத்தினார்.

காலையில் ஊரிலிருந்து வந்த நாணா மாமா ரெயில் துணியையெல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண் 4.குந்தார். தலையில் அரைக்கீரை விதைத் தைலம் கம கமத்தது. தபால் வேலைகளை முடித்துவிட்டு வந்த ஹரி, அவருக்கு ஏதாவது உதவி தேவைப்படுமா என்று அவர் அருகில் வந்து, ஆற்றுக்கா குளிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான்.

அவன் சாதாரணமாகத்தான் கேட்டான். அதில் நாணா மாமாவுக்கு அத்தனை கோபம் வருவதற்கு ஒன்று மில்லை. ஆனால் ஏனோ, அவருக்கு அவனுடைய பேச்சே பிடிக்கவில்லை. லட்சுமி கூறியவற்றையும் நினைவுபடுத்திக் கொண்டு அவர் அவனை ஒரு முறை முறைத்துவிட்டுப் புறப் பட்டார். அவன் அவர் மனத்தைப் புரிந்து கொள்ளாமல், மூட்டையைத் துாக்கப் போனான், அவர் அதற்குள் துணி மூட்டையைப் பாய்ந்து கையில் எடுத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி ஏசினார்.

‘உன்னை நான் உதவிக்குக் கூப்பிட்டேனா? உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் என் துணியைத் தூக்க வருவாய்? அவ்வளவு துாரம் மட்டு மரியாதை இல்லாமற் போய்விட்டது; இல்லையா? எல்லாம் இந்தச் சுப்பராமன் கொடுக்கிற இடம்!’ என்று ஒரு முத்தாய்ப்பு வைத்து விட்டு, வேகமாகக் கவேரியை நோக்கி நடந்தார்.

காலையில் அன்பாகத் தன்னிடம் பேசிய 5 வின் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் காரணம் அவனுக்கு விளங்கவில்லை. காலையில் சுசீலா தன் மீது புகார்