பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அண்ணாவின் ஆணை

வேக்காடு அதிகமானால் மழை உண்டாகிறது. அல்லவா? அதேபோல் மனப் புழுக்கம் தாங்காமல் கண்களில் நீர் வந்துவிடுமோ! ஹரி கலங்கினான். யாருடைய வருகைக்காக அவன் காத்திருந்தானோ அவர்கள் இப்போது அவனுக்காகக் காத்திராமல் தங்கள் சாப்பாட்டை முன்னதாகவே முடித்துக் கொண்டனர்.

நாணா மாமா போஜனத்துக்குப் பிறகு, கூடத்திலிருந்த ஊஞ்சலில் ஆடியபடியே, அருகில் இருந்த செல்லத்திலிருந்து தளிர் வெற்றிலையாக எடுத்து மடித்து மடித்துப் போட்டுக் கொண்டார். சட்டென்று ஹரியைக் கண்டதும் அவர், “எங்கேடா போயிருந்தாய் இத்தனை நேரம்? சீக்கிரமாகப் போய்ச்சாப்பிடு. அவர்களுக்கெல்லாம் வேலை இல்லையா?* என்று அவனையே கடிந்து கொண்டார். ஆனால் அவருடைய கேள்விக்குப் பதில் கூறமால் கொல்லையில் போய்த் தன் தட்டை அலம்பிக்கொண்டு வந்து வழக்கம் போல் உட்கார்ந்தான். கூடத்தில் இருந்த மாமா, சமையல் அறையில் அவன் தட்டை வைத்துக்கொண்டு உட்காரு வதையும் லட்சுமி பரிமாறப் போவதையும் பார்த்துவிட்டுப் பதறிப் போய் உள்ளே ஒடி வந்தார்.

‘ஏண்டாப்பா, உனக்குச் சாப்பிட இந்த இடந்தான் கிடைத்ததா? இங்கே உட்கார்ந்தால்தான் இறங்குமோ? தட்டை எடுத்துக்கொண்டு முதலில் நடையில் போய் உட்காரு சாதம் போடச் சொல்கிறேன்’ என்று அவனிடம்

ஒர் அதட்டல் போட்டுவிட்டு’ அடுத்தபடியாகச் சகோதரியிடம் பாய்ந்தார்.