பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் பார்க்க வந்தவர் 47

மேற்கொண்டு கூப்பிடாமல், அப்படியே எழுந்து விடுவோமா என்று ஒரு கணம் எண்ணியவன், மறுகணமே அந்த நினைப்பைக் கைவிட்டு அம்மா’ என்று அழைத்தான். லட்சுமி அம்மாள் மீண்டும் பழைய கலக்கத்துடன் வெளியே வந்தாள். ஆனால் ஹரியின் முகத்தைப் பார்த்ததும் அவள் உள்ளம் பிரகாசமடைந்தது. வழக்கத்தைவிட அன்று வேண்டுமென்றே இரண்டுபிடி சாதம் அதிகமாகவே சாப்பிட்டுக் கை கழுவினான் ஹரி.

இத்தனையையும் காயத்திரி உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். காலையில் மாமா ஊரிலிருந்து வந்தது முதல் ஹரியைப் போட்டு எல்லாரும் வாய்க்கு வந்தபடி வறுத்து எடுப்பது: எல்லாவற்றுக்கும் மேல், இன்று வந்து நாளைக்குப் போகப் போகும் மாமாவின் ஆசாரத் துக்கும் அட்டகாசத்துக்கும் உடந்தையாக இருந்து குடும் பத்தில் சிறந்த ஒருவனாக அப்பா மதிக்கும் ஹரிக்கு இழைக் கப்படும் அநீதி, இதையெல்லாம் கண்டு அவள் மனம் குமுறினாள்.

ஆனால் நியாயமோ அநியாயமோ, அதையெல்லாம் கண்டித்துக் கேட்டு வீட்டைச் சீர்திருத்த அவள் யார்? “நாளை அப்பா வரட்டும்; அவரிடம் நடந்ததை நடந்த படியே சொல்லிவிட்டால் போகிறது. பெரியவராக அப்பா ஒருவர் இருக்கிறாரே. பிறகு என்ன கவலை?” என்று மனத்தைத் தேற்றிக் கொண்டு உள்ளேயே அடைந்து கிடந்தாள். - o

பகற் பொழுதைப் போலவே இரவிலும் காரியங்கள் நடந்தன. ஆனால் அவற்றில் குழப்பமோ விவாதமோ இல்லை. லட்சுமியம்மாள் அண்ணாவுக்காகத் தனிச் சமையல் செய்திருந்தாள். ஹரி, எல்லாரும் சாப்பிட்டு முடிகிறவரை வெளியே எங்கேயோ சுற்றிவிட்டு வந்தான். வந்தவன் புதிய வழக்கப்படி தட்டை எடுத்து வந்து நடையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டான். -