பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*50 புல்லின் இதழ்கள்

மெல்லிய திரைபோல் ஹரியின் நினைவு அவள் கண்முன் படர்ந்தது. இன்னும் பொழுது விடிய வில்லையா? ஹரி பாட ஆரம்பித்தால் அந்த இசையைக் கேட்டாவது மனத்தின் தவிப்பைத் தணித்துக் கொள்ளலாமே!’ என்று எதிர்பார்த்து ஏங்கினாள். ஆனால் பொழுது விடிந்ததே தவிர, அவள் ஆவலுடன் எதிர்பார்த்த இசை பிறக்கவே இல்லை.

‘ஹரி துரங்கி விட்டானா? ஜூரமாக இருந்தால் கூட. காலை நேரச் சாதகத்தைத் துறக்கத் துணியாதவன், இன்று சோதனையைப் போல், ஏன் பாடவில்லை?

எல்லாரும் படுக்கையைச் சுற்றி வைத்துவிட்டு அவரவர் காரியங்களில் ஈடுபட்டனர். அம்மாவும் காயத்திரியும் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தனர். அவர்கள் சீக்கிரம் எமுந்துவிடக் கூடியவர்கள். வாசல் பெருக்கிச் சாணம் தெளித்து அம்மா கோலம் போடுவாள். காயத்திரி கொல்லையைக் கூட்டி, வீடு மெழுகிப் பால் கறப்பாள். சுசீலா செல்லப் பெண், அவள் எத்தனை நேரம் துரங்கி னாலும் அவளை யாரும் எழுப்ப மாட்டார்கள். ஆனால் இன்று எல்லாருக்கும் முன்பு அவள்தான் படுக்கையிலிருந்து எழுந்தாள். ஹரி பாடாமல் ஏமாற்றிவிட்டான். முந்திய நாள் அவன் பாடியதற்காக வெகுண்டாள் ; இன்று அவன் பாடாதததற்காக வெகுண்டாள். ஹரியின் அறை வாசற் படியில் நின்று கொண்டு இரையவேண்டும் போலிருந்தது, அவன் மீது அத்தனை கோபம் அவளுக்கு.

வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த மாமா எப்பொழுது காவிரிக்குப் புறப்பட்டுப் போனாரோ, யாருக்கும் தெரியாது. சுசீலா வாசல் திண்ணையில் துாணைப் பிடித்துக் கொண்டு தெருவைப் பார்த்தபடி நின்றாள், கோடியில் மாமா வருவது அவளுக்குத் தெரிந்தது.