பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நாங்கள் ஒரே ஜாதி

வழக்கமாக ஹரி அடுக்களையில் வந்து காபி குடிப்பான். இன்று அது அவன் இருக்கிற இடத்தை தேடி வந்தது. குரு நாதர் எப்போது வருகிறார், எந்த வண்டியில் வருகிறார் என்ற எதையும் திட்டமாகத் தெரிந்து கொள்ள முடியாமல் அவன் மனம் குழம்பியது. பிடில் பஞ்சு அண்ணா அதுபற்றி ஒன்றும் செல்லவில்லை.

ஹரி முதல் நாளைப் போலவே எட்டரை மணி வண் டிக்குச் சென்று பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினான்.

இனி, பதினொன்றரை மணி வண்டிக்கும் போய் அலைய வேண்டாம் ஹரி’ என்று லட்சுமியம்மாள் கூறி விட்டாள்.

ஆனால், அம்மா சொன்ன வார்த்தையைக் கேட்டு அது தான் சரி என்று ஹரி இருந்துவிடப் போகிறானா, அல்லது ஸ்டேஷனுக்குப் போகிறானா’ என்பது பற்றிச் சுசீலாவின் ஆர்வம் மிகுந்தது. அவன் அப்படி ஸ்டேஷ னுக்குப் போகாமலிருந்தால் நல்ல டோஸ்’ கொடுக்க வேண்டும் என்று எண்ணினாள்.

ஹரி கொல்லைப் பக்கம் இருந்தான். நாணா மாமாவின் பூஜை முடிய ஒன்பதரை மணி ஆயிற்று. உடனே தயாராக இருந்த ரவாக் கஞ்சியை ரசித்து, சற்று அளவுக்கு மீறிச் சாப்பிட்டு விட்டதனால் அவருக்கு பசி எடுக்க நேரமாயிற்று.

அவர் சாப்பிடுமுன் ஹரிக்குப் போட முடியாது. ஹரியும் அதைப் புரிந்து கொண்டு ஸ்டேஷனுக்குச் சென்றுவிட்டான்.