பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புல்லின் இதழ்கள்

இதுதான். உனக்கு இஷ்டமிருந்தால் இரு இல்லா விட்டால் புறப்பட்டுப் போய்விடு. ‘

‘லட்சுமி, இதை இன்னும் நீ சொல்லித் தெரிஞ்சுக்கிற அளவுக்கு இந்த நாராயணன் முட்டாள் அல்ல. இனிமேல் பட்டினிகிடந்தாலும் கிடப்பேன்; இந்த அநாசார வீட்டிலே கையை நனைக்க மாட்டேன். ராத்திரி வண்டிக்கே நான் புறப்பட்டுப் போயிடறேன். என்னமோ, நான் சாளக்ராம: பூஜை பண்றது வீண்போகல்லை; அந்த வேதபுரீசுவரர் தான் தக்க சமயத்திலே காப்பாத்தினார். நல்ல வேளை! உனக்குத் துணையா என் பிள்ளையையும் வேறே இந்தக் கும்பல்லே கொண்டு வந்து தள்ளாமல் பிழைச்சேனே. பாவம்! ராமபத்திரன்; அவன் வேதவித்து. இதெல்லாம் காதாலே கேட்டாலே பிராணனை விட்டுடுவான். இந்தச் சங்கீதக்காரன் குடும்ப சகவாசமே வேண்டாம். இனிமேல் நடவா நடை நடந்தாலும் உன் பெண்ணுக்கு என் பிள்ளை கிடையாது. சுப்பராமா, இது நிச்சயம், நிச்சயம்.’

“நிச்சயம் என்ன நாராயணா? நீ தயங்காமல் ராம பத்திரனைச் சுசீலாவுக்குக் கொடுக்க மாட்டேன் என்று சத்தியமேகூடப் பண்ணிவிட்டுப் போகலாம். பிள்ளையை நம்பிப் பிறக்கவில்லை. நான் கவலைப்படப் போவதும் இல்லை.’

அவள் உன் நீ மறுப்பதற்காக

‘'நீ எதுக்குத்தான் சுப்பராமா கவலைப்பட்டிருக்கே இப்போ இதுக்குக் கவலைப்படறதுக்கு?’’

‘"ஆமாம். கவலையைப் போக்குகிற வித்தைதானே சங்கீதம்? அதை ஆராதிக்கிறவனே கவலைப்பட்டுக் கொண்டு கிடந்தால், அவன் மற்றவர்களுடைய கவலை யைப் போக்குகிறது ஏது?’’

‘அதுக்குத்தான் நான் ஒரு யோசனை சொல்லறேன். வித்தையைக் கத்துக் கொடுத்தே; வீட்டிலே இடம்