பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் ஒரே ஜாதி 59

கொடுத்தே அவனுக்கே ஒரு வழியாப் பெண்ணையும் கொடுத்துடு. நீங்கள்ளாந்தான் ஒரே சங்கீத ஜாதிக் காராளாச்சே, நிம்மதியாப்போயிடும்.’

பேசிக்கொண்டே நாணா மாமா, கித்தான் பைக்குள் தம்முடைய துணிமணிகளைத் திணித்துக்கொண்டிருந்தார். லட்சுமியம்மாளுக்குக் கோபம் தாங்கவில்லை. அதற்கு மேலும் அவளால் அடக்கிக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை.

‘அண்ணா, இப்படிக் கலகம் பண்ணத்தான் இத்தனை வருஷம் கழித்துப் புறப்பட்டு வந்தாய் என்றால், அதற்கு நீ வாரமல் ஊரிலேயே இருந்திருக்கலாம். ஊரிலிருந்து வந்தவரை ஒரு வாய்ச் சாதம் சாப்பிட விடாமல், நீயும் சரிக்குச் சரி வாயாடறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இனிமேலும் ஒரு வார்த்தை நீ அவாளைப் பற்றிப் பேசினால், பிறகு நான் பொல்லாதவாளய் விடுவேன்’ என்றாள் லட்சுமியம்மாள் துக்கம் தாளாமல்.

உடனே நாணா மாமா, நீ பின்னே வேறே எப்படிப் பேசுவாய்? நீ எனக்காகப் பரிஞ்சு பேசுவாய்னு நான் துளிக்கூட எதிர்பார்க்கவில்லை! நீ ஒரு அசடு, மக்குன்னு: எனக்கு இப்பவா தெரியும்? இல்லேன்னா பவித்திரமான சங்கீதத்து மேலே பழியைப் போட்டுட்டு, இப்படி நீசத் தனமான காரியங்களிலே எல்லாம் பிரவர்த்திக்க உன் புருஷனுக்குப் புத்தி போகுமா? தைரியந்தான் வருமா? உள்ளுரிலே ஒரு குடும்பம், வெளியூரிலே ஒரு குடும்பம் , சே! சங்கீதம் மட்டும் ஒசத்தியாய் இருந்தாப் போதாதுச் சரித்திர சுத்தமும் வேணும். அதுதான் மனுஷனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு போகிறது. சங்கீதக்காரன்னா இப் படித்தான் இருக்கணும்னு விதி இல்லை. மகான்கள்ளாம் இந்த மண்ணிலே பிறக்கல்லியா தியாகப்ரம்மமும், தீட்சித ரும், சாஸ்திரிகளும் நமக்கு வாழ்ந்து காட்டல்லியா? நாம தான் படிச்சுத் தெரிஞ்சுக்கலை. அவா போட்ட பிச்சை