பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புல்லின் இதழ்கள்

யைச் சாப்பிட்டுப் பிழைக்கிறவனுக்கு, அவாளுக்கு இல்லாத இத்தனை கர்வமும் மமதையும் இருக்கலாமோ? உங்க அண்ணாவுக்கு இது பிழைப்பு இல்லைன்னாலும், சங்கீதத் தைப் பற்றி என்ன தெரியும் வைதீகமும் வட்டிக் கடையுந் தானேன்னு அலட்சியமா நெனைச்சுடாதே. சாமகர்னம் தலைகீழாப் பாடம் பண்ணிருக்கேன்.”

போதும் அண்ணா உன் பெருமை எல்லாம். உன்னைப்பற்றி நான் ஒன்றும் குறைவாக நினைத்துவிட வில்லை. வார்த்தையை முடிக்கு முன்பே துயரம் குரலில் கரகரக்க லட்சுமியம்மாள் உள்ளே சென்றுவிட்டாள்.

மாமா வாசற்படியைத் தாண்டுகிறவரையில் கலோ மாடியிலிருந்து வெளியே தலையைக் காட்டவில்லை. அவளுக்கு உள்ளுர மகிழ்ச்சி. எப்படியோ தன் கல்யானப் பேர். ஆரம்பிக்காமலே முடிந்து போனதில் அவளுக்கு நிம்மதி. காயத்திரி கலங்கிப்போய், சமையற்கட்டிலிருந்து வெளியே வரவில்லை; அப்பா வந்ததும் இப்படி ஒரு சண்டை மூண்டு, மனஸ்தாபம் காத்திருக்கும் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை.

போய் வருகிறேன்’ என்றுகூடச் சொல்லிக் கொள் எாமல் அண்ணா புறப்பட்டுப் போய்விட்டான். இத்தனை வருஷங்களுக்குப் பிறகு வந்த அவனைக் கணவனும் மனைவி யுமாக வாயார உபசரித்துப் பத்து நாள் வைத்துக் கொண்டு அனுப்பக் கொடுத்து வைக்கவில்லை. அண்ணா வும் அப்படியெல்லாம் ஒரு வீட்டில் படியேறிப்போய் உட்கார்ந்துகொண்டு விடுகிறவனல்ல, ஆனால், அவனுக்கு எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் இந்த முன்கோபம் ஆகாது. பாவம்! ராத்திரி எட்டு மணிக்குத்தான் அவனுக்கு வண்டி.. அதுவரைக்குங்கூட இங்கே இல்லாமற் போய் விட்டான். காபிக்கு என்ன பண்ணுகிறானோ ராத்திரிச் சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போகிறானோ ஆசையோடு வந்தவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாற்போல் தள்ளி யாகி விட்டது.