பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் செய்த மாயை 63

மனம் அமைதியை நாடி அலைந்தது. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் இசையைத்தான் சரணடைவது வழக்கம். எவ்வளவு சுலபமாக, எவ்வளவு கேவலமாக, * சரித்திர சுத்தமில்லாதவன்’ என்று நாணா குறைகூறிச்

சென்றுவிட்டான்’ என்ற உள்ளக் குமுறல் அடங்கவே

இல்லை.

இவர்கள் எல்லாரும் மறக்கப்பட வேண்டியவர்கள்.

இவர்களுடைய பேச்சும் செய்கைகளும் ஒதுக்கப்பட

வேண்டியவை. இவர்களைப் பற்றி எனக்கு என்ன கவலை?” என்று மனத்தைத் தேற்றிய வண்ணம் தம்பூராவை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.

விரல்கள் தந்தியை மீட்டின. ஆனால் அது சுந்தரி, சுந்தரி என்றே ஒலித்தது. சிந்தனை அவரை மீண்டும் அநாதையாக்கி ஒடிவிட்டது. மனம் சுருதியின் ஒலியில் சென்று லயிக்கவே மறுத்தது.

லட்சுமி நிற்கும் இடத்தில் சுந்தரியும்; சுசீலாவும், காயத்திரியும் நிற்கும் இடத்தில் வசந்தியும் சிரித்த வண்ணம் நின்றுகொண்டிருந்தனர். சுழல் விளக்கைப் போல் உருவங்கள் மாறி மாறிச் சுழன்றன. அவருடைய கண்கள் மட்டும், தன்னை அவதூறுக்கு ஆளாக்கிய-அல்ல-தன்னால் அவதூறுக்கு ஆளாகியுள்ள சுந்தரியையே வெறிக்கப் பார்த்தன.

சுப்பராம பாகவதர், பிரபல இளம் வித்துவானாகப் பொற்கொடி கட்டிப் பறந்த காலம். திருவிடைமருதூரில் வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த இளம்பெண் சுந்தரி, அlெ Tது இசையில் உள்ளத்தைப் பறிகொடுத்தாள். அவரிடம் பயிற்சி பெற்றுச் சங்கீதத்தில் முன்னேற வேண்டுமென்று விரும்பினாள். சிறுவயதிலேயே பெற் றோரை இழந்து பாட்டியின் ஆதரவில் இருந்த அவள் தன் ஆசையைக் கூறினாள். பாட்டியும் பேத்தியினுடைய