பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஏடு தேடி-காடு மேடென்று ஆண்டுகள் பல சுற்றிச் சுற்றித் தமிழ்த் தொண்டாற்றிய தாத்தாவின் ஒப்பற்ற சங்கத் தமிழ்ப் பணி-என்றும் வங்கக் கட லோரத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்க உன் rேத்திரத்தே ஒர் அரிய நூலகமும் சமைத்துஈடற்ற இலக்கியப் பணிக்கு அன்பு நீர் வார்த்த உன் இணையிலாத் தமிழ்ப் பற்றிற்கும்

வெளி நாட்டினரையும் உன் கலையால் கவர்ந்து பாரதத்தில் பரதம் பயில அழைத்து-பயில்வித்து: கடல் கடந்து இந்தியப் புகழ் பரப்பிய உன் அடக்கமான கலைப் பணிக்கும்

இயல், இசை, நாடகம் என்னும் முத்தான முத்தமிழும்கலா சாரத்திற்கு ஒரு கேடித்திரமென உன் அகத்தே முழங்கிடபழம் பெரும் பாவலர், இசைப் புலவர்கள் பலரையும் ஆதரித்து: அன்புடன் இடமளித்து குருகுல முறைப்படி இளம் மாணவர்களுக்கு நல் இசை வகுப்புகள் பல நடத்திபாட்டிலும்-எழில் நாட்டியத்திலும்

இளம் கலைஞர்கள் பலரை உருவாக்கி இவ்வுலகுக் களித்து ஈடில்லாப் புகழ்பரப்பி நிற்கும் உன் இனிய இசைத் தொண்டிற்கும்- -

- இந்நூல் காணிக்கை