பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 புல்லின் இதழ்கள்

விருப்பப்படியே பாகவதரிடம் சங்கீதப் பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தாள். ஆனால் சுப்பராம பாகவதர் சுந்தரிக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை.

சுப்பராம பாகவதருக்கு அப்பொதே அநேக சிஷ்யர்கள் இருந்தார்கள். வீட்டிலேயே தங்கிச் சங்கீதம் சொல்லிக் கொள்கிறவர்களும், வே ைள க் கு ப் பாடத்துக்கு மாத்திரம் வருகிறவர்களுமாகப் பலவிதம். ஆனால் பெண்களுக்கு மாத்திரம் சிட்சை சொல்லிக் கொடுப்ப தில்லை என்ற முடிவோடு இருந்தார், காரணம், அவருக்குப் பெண்களிடம் வெறுப்போ, அல்லது அவர்கள் சங்கீதம் கற்றுக்கொள்ள அருகதையற்றவர்கள் என்ற எண்ணமோ அல்ல. அவர்களுக்கு அவ்வளவு உயர்ந்த வித்தையைக் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொடுப்பதனால் முழுப்பலன் இருப்ப தில்லை என்பது அவர் கருத்து.

எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டு அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும், அவர்கள் கற்றுக் கொள்கிற அவர்களது சங்கீதம் திருமணத்தோடு அநேகமாக முற்றுப் பெறுகிறது. அதனால் கற்றுக் கொடுத்த வித்துவானுக்கும் புகழ் இல்லை; கற்றுக் கொண்ட பெண்ணுக்கும் பிரபலம் இல்லை. இத்தகைய வீண் முயற்சியில் இறங்குவானேன்? சிட்சை சொல்லிக் கொடுத்துச் சம்பாதித்தாகவேண்டும் என்ற அவசியமும் இல்லாததனால், பாகவதர் சுந்தரிக்குச் சொல்லிக் கொடுக்க மறுத்தார். ஆனால் சுந்தரியின் பாட்டியும், அவர் இணங்காதவரையில் விடப்போவ தில்லை’ என்று தீர்மானமாக இருந்தாள்.

இறுதியில் சுப்பராமனுடைய மாமனாரே சிபாரிசு செய்தார். அந்த அம்மாள்படுகிற அவஸ்தையையும், அந்தப் பெண்ணுக்குப் பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதி லுள்ள ஆர்வத்தையும் கண்டு மாப்பிள்ளையை ஒப்புக்